சூர்யா தற்போது கே.வி.ஆனந்த் இயக்கத்தில் காப்பான் படத்தில் நடித்துள்ளார். நேற்று தான் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததாக கூறினர்.
இந்நிலையில் இப்படத்தில் சூர்யா ஒரு ஆர்மி ஆபிசராக நடிப்பது அனைவரும் அறிந்ததே, இப்படத்தின் சூர்யா ஒரு சர்வதேச பிரச்சனையை கண்டுப்பிடிப்பது போல் தான் கதை இருக்குமாம்.
அதுவும் காட்சிக்கு காட்சி படத்தில் திருப்பம் இருக்க, அயன் படத்தை விட மிக வேகமான திரைக்கதை இப்படத்தில் இருக்கும் என கூறப்படுகின்றது.
மேலும், ஆர்யா படத்தில் மோகன்லாலின் மகனாக நடித்துள்ளார் என்றும் ஒரு சில செய்திகள் கசிந்து வருகின்றது.