சூர்யா தமிழ் சினிமாவில் ரஜினிக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். ஆம், அயன், வாரணம் ஆயிரம், சிங்கம், சிங்கம்2 என தொடர் பிரமாண்ட ஹிட் படங்களை கொடுத்தவர்.
இந்நிலையில் இவரின் கடைசி 5 படங்களான அஞ்சான், மாஸ், 24, சிங்கம்3. தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் அனைத்தும் தோல்வியை தழுவியது.
இதனால் எப்படியாவது என் ஜி கே படத்தை ஹிட் கொடுக்க வேண்டும் என்று போராடி வந்தார், ஆனால், படப்பிடிப்பிலேயே செல்வராகவனுக்கு, சூர்யாவிற்கும் முட்டிக்கொண்டதாக ஒரு பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி செல்வராகவன் சொன்ன கதை வேறு, எடுத்த கதை வேறு என்பதால் சூர்யா கடும் அப்செட்டில் இருக்க, இதுவே இப்படத்தின் வியாபாரத்திற்கு தடையாக உள்ளதாம்.
இதனால், நாமே இந்த படத்தை ரிலிஸ் செய்யலாம், லாபமோ, நட்டமோ நம்மோடு போகட்டும் என்று, காப்பானே துணை என்ற நிலைக்கு சென்றுவிட்டாராம்.