சூடான் தீவிபத்தில் தமிழக இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார் ! சம்பாதிக்க சென்று ஒரு மாதம் கூட ஆகவில்லை!
தமிழகம் விருத்தாச்சலத்தை சேர்ந்த செல்வராசு. இவரது இரண்டாவது மகன், ஜெயக்குமார். கடந்த ஒருமாத்திற்கு முன் சூடானில் உள்ள பீங்கான் தொழிற்சாலைக்கு பணிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தீவிபத்தில் சிக்கி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. செவ்வாய்கிழமை காலை ஜெயக்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சூடான் நாட்டில் சம்பாதிப்பதற்காக வேலைக்கு சென்று ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் விபத்தில் ஜெயக்குமார் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயக்குமார் இறப்பு குறித்து இந்திய தூதரகம் உறுதி செய்ய வேண்டும் என்றும். அவரது உடலை விரைவில் மீட்டு இந்தியாவுக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க உறவினர்கள் தெரிவித்தனர்.
By: Tamilpiththan