சுடுகாட்டில் சவப்பெட்டியில் வைக்கப்பட்ட குழந்தை! திடீரென உயிர் வந்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் !

0
487

தமிழகத்தில் சுடுகாட்டில் சவப்பெட்டியை இறக்கி வைத்த போது குழந்தைக்கு உயிர் இருப்பது தெரிந்து பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

தஞ்சாவூரை சேர்ந்த பாஸ்கரன் – பிரித்தி தம்பதிக்கு கெவின் (1) என்ற மகன் உள்ளான்.

கெவினுக்கு திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் அவனை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர்.

அப்போது கெவினை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டான் என கூறினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் குழந்தையின் சடலத்தை எடுத்து கொண்டு போய் இறுதிச்சடங்கு செய்தனர்.

பின்னர் குழந்தையை சுடுகாட்டுக்கு எடுத்து கொண்டு போய் சவப்பெட்டியில் வைத்த போது கெவினுக்கு அசைவு இருப்பதை பார்த்து அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர்.

பின்னர் கெவினை மீண்டும் அதே மருத்துவமனைக்கு தூக்கி சென்று, குழந்தைக்கு உயிர் இருக்கு என்னவென்று பாருங்கள் என பதறியுள்ளனர்.

அப்போது மருத்துவர்கள், இப்போது தான் சில நிமிடங்களுக்கு முன்னர் கெவினின் உயிர் போயுள்ளது என கூற பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து ஆவேசமாகிவிட்டனர்.

இதையடுத்து அனைவரும் மருத்துவமனை முன்னர் போராட்டம் நடத்தினார்கள். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Previous articleஅக்டோபர் மாதத்தில் பிறந்தவர்களிடம் கொஞ்சம் உஷாராவே இருக்கனுமாம்… ஏன்னு தெரியுமா?
Next articleகுழந்தை தொழிற்சாலை… ஒரே குடியிருப்பில் 19 கர்ப்பிணி பெண்கள்: வெளிவரும் கொடூர பின்னணி !