மேஷம்
மேஷ ராசியினர்களுக்கு, அதிபதி செவ்வாய். செவ்வாயின் தாக்கத்தால் பணம் கிடைக்கும். இவர்கள் நினைத்த காரியத்தை முடித்த பின்னரே பெருமூச்சு விடுவார்கள். மேலும், அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் அதிகமாகவே பெறுவார்கள். அதனால் அவர்களுக்கு செல்வத்தில் எந்தக் குறைவும் இல்லை.
ரிஷபம்
ரிஷப ராசியினர்களுக்கு சுக்கிரன் தாக்கம் அதிகம். சுக்கிரனின் அருளால் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் பொருள் வசதிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட தேவதை உங்களுடனேயே இருப்பார்.
கடகம்
கடக ராசியினர்களுக்கு சந்திரன் அதிபதி. இந்த ராசிக்காரர்கள் சந்திரனின் தாக்கத்தால் மட்டுமே கடினமாக உழைக்கிறார்கள். அதுமட்டுமின்றி இந்தக் ராசியினரின் தலைமைத் திறனும் அபாரமானது. கடக ராசிக்காரர்கள் தங்கள் கடின உழைப்பால் சிறு வயதிலேயே பணக்காரர்களாக மாறுகிறார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியினர்களுக்கு ராசியினர் இயல்பாகவே பணக்காரராக அல்லது பணக் கஷ்டம் இல்லாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடினமாக உழைப்பார்கள். ஜாதகத்தில் சூரிய கிரகத்தின் ஆதிக்கம் காரணமாக இந்த ராசி அவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தை பிரகாசிக்கிறது. ஆடம்பரங்களை விரும்புபவர்கள். தங்களது இந்த ஆசையை நிறைவேற்றவும், பணம் சம்பாதிக்கவும் கடினமாக உழைப்பார்கள். சிறு வயதிலேயே செல்வாக்கு, புகழ் மிகுந்தவர்களாக இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியினர்கள் வியாழன் பகவானின் சிறப்பு ஆசிகளைப் பெற்றவர்கள். அதனால் அவர்களுக்கு பணத் தட்டுப்பாடு ஏற்படாது. அதுமட்டுமின்றி, அவர்கள் மரியாதை மற்றும் புகழை சாதாரணமாகவே பெறுவார்கள். மேலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறும் ராசியினர் என்றால் இவர்கள்தானாம்.