சிறிலங்காவின் புகையிரத திணைக்களம் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யவுள்ள புதிய தொடருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டீசல் எரிபொருளில் இயங்கும் S14 ரகத்தைச் சேர்ந்த இந்த தொடருந்து, சீனாவின் ரயில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றால் வடிவமைக்கப்பட்டு வரும் நிலையிலேயே இந்த தகவலை மேற்படி திணைக்களம் வெளியிட்டுள்ளது.
குறித்த தொடருந்தை இலங்கையின் மலையகப் பகுதிக்கான சேவையில் ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா புகையிரதத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை சீனாவிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்கு நவீன சொகுசு பேருந்துகளும் கொள்வனவு செய்யப்படுகின்றன.
இதன் முதல் கட்டத்தின் கீழ் சீனாவின் Xiamen Kinglong United Automotive Industry நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 சொகுசு நவீன பஸ்களை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.







