சீதா ராமம் திரைப்படத்தின் வசுல் வேட்டை!
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமானவர் நடிகர் துல்கர் சல்மான். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் சுப்பர்ஹிட்டாகியுள்ளது.
கடந்த 2020ஆம் ஆண்டு துல்கர் சல்மான் தமிழில் நடித்து வெளிவந்த கண்ணும் கண்ணும் கொள்ளையாடித்தால் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிப்பெற்றது.
இதை தொடர்ந்து தற்போது மலையாலத்தில் உருவாகி தமிழிலும் வெளிவந்துள்ள திரைப்படம் சீதா ராமம்.
இப்படத்தில் துல்கருடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, மிருணாள் தாக்கூர், கவுதம் மேனன், சுமாந்த் ஆகியோர் நடித்திருந்தார்கள்.
கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி குறைந்த திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்று அதிகரிக்க துவங்கியுள்ளது.
இந்நிலையில், 2வது நாள் முடிவில் உலகளவில் சுமார் ரூ. 10 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் மட்டுமே ரூ. 1.20 கோடி வரை வசூல் செய்துள்ளது.
முதல் நாளை விட இரண்டவது நாளில் நான்கு மடங்கு வசூல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.