சில பல கண்டிஷனுடன் ஓப்பந்தமாகும்! அஜித்தின் அடுத்த இரண்டு படத்தின் இயக்குனர் இவர் தான்!

0
737

அஜித் தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்று அழைக்கப்படுபவர். அப்படியிருக்க இவர் தொடர்ந்து சிவாவுடனே பயணிப்பது ரசிகர்களுக்கே கொஞ்சம் வருத்தம் தான்.

இந்நிலையில் அஜித் விஸ்வாசம் முடிந்து அடுத்து வினோத் இயக்கத்தில் தான் நடிக்கவுள்ளார், இப்படம் பிங்க் ரீமேக் என சொல்ல, வினோத் மிகவும் யோசித்தாராம்.

என்னால் ரீமேக் படங்களை எடுக்க முடியாது, என்னிடமே கதை உள்ளது என வினோத் சொல்ல, அஜித் வினோத்திடம் சில நம்பிக்கை வார்த்தைகளை கூறினாராம்.

அதாவது ‘இந்த படத்தை முடித்துக்கொடுங்கள், அடுத்து சத்யஜோதி நிறுவத்திற்காக மீண்டும் நாம் நீங்கள் சொன்ன கதையில் இணைகின்றோம்’ என வாக்கு கொடுக்க, பிறகு வினோத்தும் பிங்க் கதையை தன் ஸ்டைலுக்கு மாற்றி வருவதாக கூறப்படுகின்றது.

Previous articleதீயாய் பரவும் காணொளி! பந்துகளை திருடும் நரி!
Next articleஉயர்நீதிமன்றம் வழங்கிய‌ அதிரடி தீர்ப்பு! சீரியல் நடிகை வைஷ்ணவி தற்கொலையில் சிக்கியவருக்கு!