சிறைக் கைதிகளுக்கு அதிர்ச்சியளிக்கும் தகவல்!

0
436

அண்மையில் சிறைச்சாலைக்குள் இருந்து கைத்தொலைபேசிகள் கண்டறியப்பட்டதையடுத்து, நாடு முழுவதிலுமுள்ள சிறைச்சாலைகளில் சிறப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போதைப் பொருள் கடத்தல் காரர்கள் சிறைச்சாலைக்குள்ளிருந்து தொலைபேசிகள் மூலம் போதைப் பொருள் வர்த்தகத்தை மேற்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

சிரேஸ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிடுகையில், சிறைச்சாலைகளுக்கு வெளியே உள்ள நபர்களுக்கு போதைப் பொருள் கடத்தல்காரர்களால் எடுக்கப்பட்ட தொலைபேசி அழைப்புகள் பகுப்பாய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

சிறைச்சாலைகளில் சந்தேகநபர்கள் அல்லது குற்றவாளிகளால் தொலைபேசி பயன்படுத்துவது தொடர்பாக பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் தகவல் பெறப்பட்டபோது, சிறைச்சாலைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுப்பதற்காக தகவல் அனுப்பப்பட்டது என அவர் கூறினார்.

மேலும், கைதிகளைப் பார்வையிட வருவோரிடம் தொலைபேசிகளை கொண்டுவராமல் தடைசெய்வது சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பொறுப்பாகும் என்றார்.

Previous articleஇந்தியாவில் பாதுகாப்பில்லை: சுவிஸ் வீராங்கனைக்கு அனுமதி மறுப்பு!
Next articleமகனை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்? கசிந்த ரகசியம். ஒரு தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!