முத்து எப்படி சிப்பிக்குள் உருவாகிறது என்பது சுவாரஸ்யமான ஒரு விஷயம். அதுவும் இயற்கை அதிசயமாகவும் உள்ளது.
முத்துக்கள் உலகின் வெப்பமான கடல்பகுதியில் மட்டும் அதிகமாக உருவாகின்றன.
சிப்பிகள் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. கடல் நீரில் உள்ள கால்சியம் கார்பனேட் என்ற தாதுப்பொருளையும், சில அங்ககப் பொருட்களை சிப்பிகள் உட்கொள்வதால்,முத்து உருவாவதற்கான நாக்ரே மூலப்பொருளை உற்பத்தி செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
முத்து (Pearl) என்றதும் எமக்கு முதலில் நினைவுக்கு வருவது அரச பரம்பரையினரையே. ஏனெனில் புரதான காலத்தில் வாழ்ந்த சாதாரண மக்கள் முத்தை தமது அணிகளிளொன்றாகத் தெரிவு செய்ய முடியாத நிலைமை நீடித்தது.
இதன் பெறுமதி உச்சக்கட்டத்தில் காணப்பட்டதால் மகாராணி, இளவரசி, சீமாட்டி போன்ற வர்களே முத்துக்கள் பதிக்கப்பட்ட நகைகளை அணிந்து வந்தனர் என்பது கண்கூடு. விலை மதிப்புள்ள இந்த முத்துக்களை முத்து குளித்தல் மூலமே பெற வேண்டிய நிலைமை காணப்பட்டது என்றும் கூறலாம்.
இன்றைய நவீன காலத்தில் எப்படி முத்து எடுக்கப்பட்டு அது லட்சகணக்கில் பெருமதியான ஆபரணங்களாக மாறுகின்றது என்று இந்த காணொளியில் பாருங்கள்.