Home thatstamil one india tamil oneindia tamil சின்மயி பகீர் குற்றச்சாட்டு! இலங்கை பெண்ணை ப‌டுக்கைக்கு அழைத்த அஜித் பட டான்ஸ் மாஸ்டர்!

சின்மயி பகீர் குற்றச்சாட்டு! இலங்கை பெண்ணை ப‌டுக்கைக்கு அழைத்த அஜித் பட டான்ஸ் மாஸ்டர்!

0
998

தமிழ் சினிமா துறையில் தற்போது பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகம் குவிந்து வருகிறது. பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து சர்ச்சை தேசிய அளவில் அனைவரையும் பாலியல் புகார்கள் குறித்து பேசவைத்துள்ளது.

மேலும் தற்போது முன்னணி டான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது இலங்கை பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு வைத்துள்ளார். அதை சின்மயி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அஜித்தின் பல படங்களில் பணியாற்றியுள்ளவர் கல்யாண்.

சால்சா டான்ஸில் ஆர்வம் கொண்ட இலங்கை பெண் 2010ல் சென்னை வந்துள்ளார். டான்ஸ் க்ளாசில் அவர் கல்யாண் மாஸ்டரை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் நடனம் ஆடுமாறு கேட்டுள்ளார். ஆடும்போது தகாத இடங்களில் தொட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியான அந்த பெண் ‘எனக்கு தலைவலி’ என கூறி அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் அன்று இரவு போன் செய்த கல்யாண் மாஸ்டர் தன்னுடைய படுக்கைக்கு வந்தால் அசிஸ்டன்ட் கோரியோகிராபர் பணி தருவதாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியான அந்த பெண் சினிமா துறையே வேண்டாம் என கூறி சென்றுவிட்டாராம். கல்யாண் மாஸ்டரால் தன் நடன கனவை விட்டுவிட்டு தற்போது திருமணம் செய்துகொண்டு அவர் ஹவுஸ்வைப்பாக இருக்கிறாராம்.


Previous articleஐரோப்பிய நாடொன்றில் இருந்து புகலிடம் கோரிய நிலையில் திருப்பி அனுப்பப்பட்ட இலங்கையர்கள்!
Next articleதிருமணமான மறு நாளே மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!