சின்மயியின் அடுத்த சர்ச்சை டூவிட்! என்னது பாலியல் தொல்லை ஆண்களுக்குமா!

0
416

வரிசையாக பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டப் பெண்களின் கதையைப் பகிர்ந்து வரும் சின்மயி தற்போது ஒரு ஆணுக்கு நடந்த பாலியல் அத்துமீறலைத் தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளார்.

கவிஞர் வைரமுத்து மற்றும் நடிகர் ராதாரவி போன்றோர் மீது பாலியல் அத்துமீறல் குற்றச்சாட்டு வைத்த பாடகி சின்மயி தற்போது மிருதங்க வித்வான் ஒருவரால் பாதிக்கப்பட்ட ஆண் ஒருவரின் கதையைப் பகிர்ந்த்துள்ளார்.

அந்த டுவீட்டில் பெயர் குறிப்பிடாத அந்த பாதிக்கப்பட்டவர் கூறியுள்ளதாவது ‘எனக்கு 13 வயதிருக்கும் போது மிருதங்க வித்வான் ஆர் ரமேஷ் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தார். அப்போது அவர் எனது பிறப்புறுப்பைத் தொட்டார். நான் எதேச்சையாக கை பட்டிருக்கும் என நினைத்தேன்.

அவரோடு நாங்கள் அஞ்சலி படத்திற்கு சென்றிருந்தோம். திரையரங்கிலும் அவர் இதையே மறுபடியும் செய்தார். அதை நான் எதிர்த்த போது ஏன் உங்கள் நண்பர்கள் கூட்டத்தில் இதுப்போல செய்துகொள்வதில்லையா? என என்னைக் கேட்டார். நான் இல்லை எனக் கூறினேன்.

அந்த சம்பவம் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. அதன் பின் நீண்ட காலம் கழித்து நாங்கள் அவரை சந்தித்தபோது என்னை என் குடும்பத்தார் அறிமுகப்படுத்தியபோது அவர் ‘ஓ தெரியுமே.. நாம் அஞ்சலி படத்திற்கு சென்றோமே’ என அந்த சம்பவத்தை நினைவுப் படுத்தினார்.’ என தனக்கு நடந்த பாலியல் அத்துமீறலை தெரிவித்துள்ளார்.

Previous article12.10.2018 இன்றைய ராசிப்பலன் புரட்டாசி 26, வெள்ளிக்கிழமை!
Next articleநிச்சயதார்த்த விழாவில் அந்த ஆபாச நடிகையையே மிஞ்சிய பிரியங்கா – உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!