சித்திரை புத்தாண்டில் வருடம் முழுவதும் 12 ராசியினருக்கும் எப்படியான அதிஸ்டம் நிறைந்த பலன்கள் கிட்டப் போகின்றன!
மேஷம்
சார்வரி புத்தாண்டு தனுசு ராசியில் துலாம் லக்னத்தில் பிறக்கிறது. மேஷம் ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆண்டு பிறப்பதால் நீங்க எதிர்பாராத பணவரவு உங்களுக்கு கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு அதிக மகிழ்ச்சி, சந்தோஷங்களை தரப்போகிறது.
மிதுனம்
சார்வரி தமிழ் புத்தாண்டு பிறக்கும் நேரம் உங்களுக்கு அற்புதங்களை ஏற்படுத்தப்போகிறது. என்ற போதும் அஷ்டம சனி இருப்பதால் ஆட்டி வைக்கும்.
கடகம்
கடகம் ராசிக்காரர்களுக்கு சார்வரி தமிழ் புத்தாண்டு முன்னேற்றங்கள் சாதனைகள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
சிம்மம்
உங்க ராசிக்கு ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதுவருடம் பிறக்கிறது. உங்களுக்கு சங்கடங்கள் இருந்தாலும் சந்தோஷங்கள் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு உங்க ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த சார்வரி தமிழ் புத்தாண்டு சுகமான ஆண்டாக பிறக்கிறது. வீண் சண்டைகள் வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
சார்வரி தமிழ் புத்தாண்டில் நிறைய சவால்களை சந்திப்பீர்கள். துணிச்சலாக நீங்கள் எடுக்கப்போகின்ற முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். வங்கி சேமிப்பும் உயரும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். சனி வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே இந்த சார்வரி புது வருடம் உங்க ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும்.
மகரம்
இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும், சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும்.
கும்பம்
சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும், அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது.
மீனம்
உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும்.