முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் இருதய சத்திர சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் பரிசோதனைக்கு சென்றிருந்த போது, இருதயத்திற்கு குருதியை கொண்டு செல்லும் இரண்டு வல்வுகளில் அடைப்பு இருந்ததாகவும் சத்திர சிகிச்சையில் மூலம் அவை அகற்றப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதாகவும் கோத்தபாயவின் பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
இதற்கு அமைய கோத்தபாயவுக்கு இந்த இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சத்திர சிகிச்சையின் பின்னர் சாதாரண விடுதிக்கு மாற்றப்பட்டுள்ள, அவர் இரண்டு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
இதன் பின்னர், மூன்று மாத காலத்திற்கு சிறிய உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும் எனவும் மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு அமைய கோத்தபாய ராஜபக்ச மீண்டும் இலங்கை திரும்புவார் எனவும் அந்த பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.