சிக்கன் எடுத்துட்டு வர தாமதம்.. உயிரே பறிபோனது! நிச்சயதார்த்த விழாவில் சோகம்

0

ஆந்திராவில் நிச்சயதார்த்த விழாவின் போது சாப்பாட்டுக்கு சிக்கன் டிஷ் எடுத்து வர தாமதமானதால் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

சார்மினார் அருகே ஹுசைனி ஆலம் பகுதியில் உள்ள மண்டபத்தில் நேற்று நிச்சயதார்த்தம் நடக்கவிருந்தது.

இவ்விழாவின் சம்பிரதாய நிகழ்வுகள் முடிந்ததும் அதைத் தொடர்ந்து சாப்பாட்டு வேளை ஆரம்பமானது.

அப்போது சிக்கன் டிஷ் எடுத்துவர தாமதமானதால் சிலர் பொறுமை இழந்தனர், இதனால் இரு குழுக்களுக்கு இடையே வாக்குவாதம் முற்றியது.

இதனால் கடும் கோபத்துடன் புறப்பட்ட சென்ற குழுவினரில், 15 பேர் மட்டும் விழா முடியும் முன் திரும்பி வந்தனர்.

விருந்தினர்களை சரமாரியதாக தாக்கவே, இளைஞர் ஒருவர் பலியானார், மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தகவலறிந்து விரைந்து சென்ற பொலிஸ் அதிகாரிகள், மூவரை மட்டும் கைது செய்துள்ளனர், மற்றவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Previous articleமுதல் கணவரால் கொல்லப்பட்ட பெண்…8 வருடங்களுக்கு பிறகு இரண்டாவது கணவருடன் வந்த அதிசயம்..!!
Next articleகால்களை இழந்த காதலன்.. காதலி செய்த அதிர்ச்சி காரியம்!