சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020: ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்? துலாம் முதல் மீனம் வரை!

0

சார்வரி தமிழ் புத்தாண்டு பலன்கள் 2020: ராஜயோகத்தை அடையப்போகும் ராசிக்காரர் யார்? துலாம் முதல் மீனம் வரை!

துலாம்
சார்வரி தமிழ் புத்தாண்டில் துலாம் ராசிக்காரர்களாகிய நீங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்வீர்கள், ஆனாலும் துணிச்சலாக நீங்க எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். இதுவரை இருந்த‌ வழக்குகள் உங்களுக்கு சாதகமானதாக‌ முடியும். யாரிடமும் வம்பு வழக்குகள் வீண் வாக்குவாதங்கள் என்பவற்றை தவிர்க்கவும். இந்த ஆண்டு சொத்துக்கள் வாங்கும் யோகம் தேடி வரும். சிலருக்கு புதிய பதவிகள் சம்பள உயர்வு கிடைக்கும்.

தாயாரின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியாக அமையும். சில நேரங்களில் பெண்கள் குடும்ப வாழ்க்கையில் கசப்பான உணர்வுகளை சந்தித்தாலும் சில மாதங்களில் அவை நீங்கும். வியாபாரத்தில் பண வரவுகள் ஏற்ற இறக்கம் நிறைந்ததாக அமையும். மறைமுக எதிர்ப்புகளால் மன அமைதி குறைவடையும். பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற முதலீடுகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம் : லட்சுமி நரசிம்மர்
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

விருச்சிகம்
விருச்சிகம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இந்த ஆண்டு பணப்புழக்கம் அதிகரிக்கும். வங்கி சேமிப்புக்கள் உயரும். குடும்பத்தில் சந்தோசமாக இருப்பீர்கள். சனி பகவான் வக்ரகதியில் சஞ்சரிக்கும் காலத்தில் பேச்சில் நிதானமாக இருக்கவும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். வேலைச்சுமை அதிகமாக இருந்தாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள். நிறைய வாடிக்கையாளர்கள் கிடைப்பதால் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய முதலீடுகளை தவிர்த்து விடுவது நல்லது. அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் உங்களை தேடி வரும். வங்கி சேமிப்புக்கள் அதிகரிக்கும். ஆரோக்கியம் அற்புதமாக அமையும். தொட்டதெல்லாம் பொன்னாகும் நேரம் அமையும் நீண்ட நாள் கனவுகள் நனவாகி நினைத்த காரியம் நடக்கும். சுப காரிய பேச்சுக்கள் சாதகமாக முடியும். பேச்சில் கோபத்தை குறைத்துக்கொண்டால் நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, கார்த்திகை, பங்குனி
வணங்க வேண்டிய தெய்வம் : கால பைரவர்
அதிர்ஷ்ட நாள் : செவ்வாய்கிழமை

தனுசு
இந்த சார்வரி புது வருடம் தனுசு ராசிக்காரர்களே உங்கள் ராசியிலேயே பிறக்கிறது. உங்களுக்கு வேலைச்சுமை அதிகரித்து காணப்படும். உங்களுடைய பொறுப்புக்களை யாரையும் நம்பி ஒப்படைக்காதீர்கள். ஏழரை சனி காலம் என்பதால் ஒருவிதமான பதற்றம் இருந்துகொண்டே இருக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள். அடிக்கடி கோபப்பட்டுக்கொண்டிருந்த மன நிலை மாறி உங்க கோபம் படிப்படியாக குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

சொந்த பந்தங்களுடன் கூடி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் வரும் சிலருக்கு எதிர்பார்த்த பணம் வரும் சில நேரங்களில் எதிர்பாராத பணமும் வரும். எதிரிகள் பிரச்சினைகள் விலகும். ப‌டிப்படியாக உங்க பிரச்சினைகள் அனைத்தும் விலகும். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பூர்வீக சொத்துக்களின் மூலம் வருவாய் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டாகும். பணவரவு சிறப்பாக இருக்கும். கொடுத்த கடன்கள் கைக்கு வந்து சேரும். ஆரோக்கியம் நல்லபடியாக இருக்கும். சாதனைகள் நிறைந்த ஆண்டாக சார்வரி புது வருடம் உங்களுக்கு பிறக்கப் போகிறது.

அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி
வணங்க வேண்டிய தெய்வம் : குரு பகவான், ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : வியாழக்கிழமை

மகரம்
இந்த சார்வரி தமிழ் புது வருடம் குடும்பத்தில் அதிக குதூகலத்தை ஏற்படுத்தப்போகிறது. நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும். செலவுகள் கூடும். வரவை விட திடீர் செலவுகள் ஏற்படும். உங்க குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். திருமணம் கைகூடி வரும். புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். உயர்கல்வி யோகம் கை கூடி வரப்போகிறது. ஏழரை சனி காலம் என்பதால் வீண் வாக்குவாதங்கள் வேண்டாம் கோபத்தை கட்டுப்படுத்துங்கள் நிதானமாக இருங்கள். சிலருக்கு வீடு வாங்கும் யோகம் கை கூடி வரப்போகிறது.மறைமுக எதிர்ப்புகள் குறையும். உங்க பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நல்ல வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தைகளுக்கு கல்வி செலவுகள் தேடி வரும். திட்டமிட்டு செலவு செய்யுங்கள். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். சார்வரி தமிழ் புது வருடம் சந்தோஷங்களை தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது.

அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை
வணங்க வேண்டிய தெய்வம் : விநாயகர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

கும்பம்
சார்வரி தமிழ் புதுவருடம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஆரோக்கியமும் அதிர்ஷ்டமும் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. என்னதான் ஏழரை சனியில் விரைய சனி, விரைய குரு என்றாலும் உங்களுக்கு லாபங்களை அள்ளித்தரப்போகிறது. ராஜயோகத்தை தரப்போகிற ஆண்டாக அமைந்துள்ளது. முன்னேற்றங்கள் அதிகரிக்கும். பணப்பற்றாக்குறை நீங்கும். சேமிப்பு அதிகமாகும். சுப செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உங்களுடைய கடன்களை திரும்ப செலுத்துவீர்கள். கடந்த காலங்களில் உங்களை வாட்டி வதைத்த பிச்சினைகள் தீரும். சொந்த பந்தங்களால் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள். நீங்க நினைத்தது நிறைவேறும். திருமணம் உள்ளிட்ட சுப காரியங்கள் இந்த ஆண்டு நடைபெறும். குழந்தைக்காக தவித்துக்கொண்டிருந்தவர்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். நோய் பாதிப்பு பற்றிய அச்சம் நீங்கும். ஏழரை சனியால் சின்னச் சின்ன பாதிப்புகள் வந்தாலும் அது விரைவில் தீரும்.

அதிர்ஷ்டமான மாதங்கள்: சித்திரை, வைகாசி, ஆடி, கார்த்திகை, மார்கழி
வணங்க வேண்டிய தெய்வம் : ஆஞ்சநேயர்
அதிர்ஷ்ட நாள் : சனிக்கிழமை

மீனம்
உங்க ராசிக்கு பத்தாம் வீட்டில் புத்தாண்டு பிறக்கிறது. திடீர் திருப்பங்கள் நிறைந்த ஆண்டாக அமைந்துள்ளது. நல்ல வேலை கிடைக்கும். சுப காரியங்கள் கைகூடி வரும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். கௌரவ பதவிகள் தேடி வரும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பங்குச்சந்தையில் நீங்கள் செய்யும் முதலீடுகள் இரட்டிப்பு லாபத்தை கொடுக்கும். பிரிந்திருந்த உறவினர்கள் ஒன்று சேருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும். தை மாதம் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து போடுவீர்கள். திருமணம் கை கூடி வரும் புத்திரபாக்கியம் கிடைக்கும். விரைய செலவுகளை கட்டுப்படுத்துங்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளால் நல்ல செய்திகள் தேடி வரும். பிள்ளைகளுக்காக சுப செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். இந்த சார்வரி புது வருடம் சாதனைகளை தரப்போகும் ஆண்டாக அமைந்துள்ளது.

அதிர்ஷ்டமான மாதங்கள்: வைகாசி, ஆனி, ஆவணி, மார்கழி, தை
வணங்க வேண்டிய தெய்வம் : மீனாட்சி
அதிர்ஷ்ட நாள் : வெள்ளிக்கிழமை

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 210ஆக அதிகரித்துள்ளது!
Next articleவாக்கிய மற்றும் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி சார்வரி புதுவருடம் பிறக்கும் நேரம் மற்றும் கைவிசேட நேரம் சுபகாரியம் செய்யும் நேரம் புத்தாடை நிறம்!