சாய் பல்லவி போல நீளமான கூந்தல் உள்ள பெண்களை ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா!

0

பெண்கள் என்றாலே அழகு தான். ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருக்கும். சிலருக்கு சிரித்தால் கன்னத்தில் குழி விழும்.

சிலருக்கு வட்டமான முகம் அவர்களது அழகை எடுத்துக் காட்டும். சிலருக்கு உடல் வாகு, பலருக்கு புட்டுன்னு இருக்கும் கன்னம்.

ஆனால், பொதுவாக அனைத்து பெண்களையும் அழகாக காட்டும் ஒரு விஷயம் இருக்கிறது எனில் அது அவர்களது கூந்தல் தான்.

ஆண்கள் அதிகமாக விரும்புவதன் காரணம் என்ன தெரியுமா?
புராணம்

புராணம் முதலே பெண்கள் என்றால் அவர்களுக்கு நீளமான கூந்தல் இருக்கும் அது அவர்களுடைய அழகின் மணிமகுடம் என்பது போல உவமை கூறி சென்றுவிட்டனர். இதிலிருந்து வெளியே வர தமிழ் ஆண்களின் மனம் கொஞ்சம் தடுமாற தான் செய்யும்.

மணம்

பெண்களின் கூந்தலில் மணம் இருக்கிறதா இல்லையா என்பது இந்திரன் காலத்தில் இருந்து இன்றைய எந்திரன் காலம் வரை நீடித்துக் கொண்டே தான் போகிறது. ஆனால், அவரவருக்கு பிடித்த பெண்களின் கூந்தல் மணம் ஆண்களின் நாசியிலே குடியிருக்கும் என்பது காதல் மன்னர்களுக்கு மட்டுமே தெரியும்.

அலங்கார மாளிகை

பெண்களின் கூந்தல் அழகு மட்டுமல்ல, அலங்கார மாளிகையும் கூட. நீளமான கூந்தல் இருக்கும் பெண்களுக்கு தான் பூக்களை வைத்து நிறைய சிகை அலங்காரம் செய்ய முடியும்.

அலங்கார மாளிகை

இப்போதெல்லாம், திருமணத்தின் போது மட்டும் சவுரி முடியில் பிளாஸ்டிக் பூக்களை சூடிக் கொண்டு சில மணிநேரத்தில் கட்டி எழுப்பி அந்த அலங்கார மாளிகையை இடித்து நொறுக்கி விடுகிறார்கள்.

பொறாமை

தங்கள் மனைவி அல்லது காதலிக்கு நீளமான கூந்தல் இருந்தால் அழகு என்பதையும் தாண்டி, பத்து பேர் வயிர் எரியும் என்பதும் ஓர் கொசுறு செய்தி. பொதுவாக ஓர் பெண்ணுக்கு நீளமாக கூந்தல் இருந்தால், அது மற்ற பெண்களுக்கு சுத்தமாக பிடிக்காது. சற்று பொறாமைப்படுவார்கள்.

நீளமான கூந்தலை கொண்டுள்ள பெண்கள் மீது ஆண்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்க இத்தனை காரணங்கள் இருக்கின்றன. இதற்காகவாவது பெண்கள் வீட்டில் விஷேச சமயங்களில் நீண்ட கூந்தலுடன் தரிசனம் தரலாம். (சவுரி முடி வைத்துக் கொண்டாவது.)

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநடிகை சினேகா, பிரசன்னா காதல் ஜோடியின் தற்போதைய நிலை! இப்போ எப்படி இருக்கின்றார்கள் தெரியுமா! புகைப்படம் உள்ளே!
Next articleதினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிடுபவர்களா! சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா!