சர்வதேசத்தின் கண்காணிப்பில் இலங்கை! ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி!

0
339

சமகாலத்தில் இலங்கை முகங்கொடுத்துள்ள மோசமான நெருக்கடி நிலை குறித்து உலக நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன.

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் தொடர்ச்சியாக பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமையினால் இலங்கை சர்வதேசத்தின் அவதானத்திற்குள்ளாகியுள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா உட்பட வளர்ந்து வரும் பொருளாதார சந்தையின் பரிவர்த்தனை விகித நெருக்கடியின் அடிப்படையில் சர்வதேச நாடுகள் கவனம் செலுத்தியுள்ளன.

இது தொடர்பான தகவல்களை பொருளாதாரம் தொடர்பான சர்வதேச நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

பரிவர்த்தனை விகித நெருக்கடி காரணமாக முதலீட்டாளர்கள் அச்சமடைந்துள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை, தென்னாபிரிக்கா, ஆர்ஜன்டீனா, பாகிஸ்தான், எகிப்து, துருக்கி, யுக்ரேன் ஆகிய நாடுகள் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக சர்வதேச நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நாடுகளுக்குள் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் மிகவும் அவதான நிலையில், உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Previous articleசின்மயி வைரமுத்து விவகாரம் – கமல்ஹாசன் கூறிய கருத்து!
Next article13.10.2018 இன்றைய ராசிப்பலன் – புரட்டாசி 27, சனிக்கிழமை!