சர்கார் தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பு நிலவி வருகின்றது.
இந்த நிலையில் தளபதி இப்படத்தில் உலக அளவில் பெரிய தொழிலதிபராக இருப்பவராக நடிக்கின்றார், அமெரிக்காவிலிருந்து ஒரு முறை இந்தியா வரும் போது விஜய் பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்காதாம்.
இதனால் கோபமான விஜய் இதுக்குறித்து விசாரிக்கும் போது எல்லோரும் காட்டும் அலட்சியம், அவருக்கு கோபத்தை ஏற்படுத்த, அதன் பிறகு அவரே களத்தில் இறங்குவது தான் சர்கார் என ஒரு தகவல் கசிந்து வருகின்றது.
இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், பெரும்பாலும் இவை தான் கதை என கிசுகிசுக்கப்படுகின்றது.




