சயீஷாவை திருமணம் செய்யப்போகிறேன் உறுதியான தகவலை வெளியிட்டார் ஆர்யா! திருமணம் எப்போது தெரியுமா!

0

நடிகர் ஆர்யா நடிகை சயீஷாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. இந்நிலையில் வரும் மார்ச் மாதம் 10ம் தேதி ஹைதராபாத்தில் அவர்களின் திருமணம் நடக்க உள்ளதாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் ஆர்யாவும், சயீஷாவும் அது குறித்து வாய் திறக்கவில்லை.

ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ள ஆர்யாவோ எதை எதைப் பற்றியோ கருத்து தெரிவித்தாரே தவிர திருமணம் பற்றி அமைதியாக இருந்தார். இதனால் இது உண்மையா, இல்லை இதுவும் கடந்து போகுமா என்று தெரியாமல் இருந்தது.

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் 16 பெண்களில் யாரையாவது ஒருவரை தேர்வு செய்து ஆர்யா கல்யாணம் செய்ய வேண்டும். இது தான் இந்த நிகழ்ச்சியின் தொடக்கம்.. இதனால் ஆர்யா கடைசியில் நான்குபேரை தேர்ந்தெடுத்தார். ஆனால் இறுதியில் நான்குபேரில் ஒருவரை கூட ஆர்யாவுக்கு பிடிக்காமல் போனதால் மறுத்துவிட்டார்.

மேலும் ஆர்யாவுக்கு இதனால் கடும் விமர்சனங்கள் எழுந்தன. அதைத் தொடர்ந்து ஆர்யா நடிகை சயீஷா மீது காதலில் விழுந்தார், இவர்கள் பல இடங்களில் ஊர் சுற்றி வருவதாக தகவல் வெளிவந்து கொண்டிருந்தது. ஆனால் ஆர்யா உண்மையாக காதலை உறுதி செய்யாமல் இருந்தார். இதைத்தொடர்ந்து ஆர்யா காதலர் தினமான இன்று சயீஷாவை மார்ச் மாதத்தில் திருமணம் செய்யப்போவதாக அதிகாரப் பூர்வமான அறிவிப்பை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

எது எப்படியோ ஆர்யா திருமணம் செய்தால் போதும் என்று ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. நாமும் வாழ்த்தலாமே…

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிரமப்படாமல் உடல் எடை குறைக்க சில எளிய வழிகள்!
Next articleஅடிக்கடி கோபப்படுபவரா நீங்கள்! அப்டினா இதை முதல்ல செய்யுங்க!