ஹபரணவிற்கும், கந்தளாய்க்கும் இடைப்பட்ட வழியில் வானொன்று யானையுடன் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த சம்பவம் நேற்று நள்ளிரவு இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்தின் போது யானை சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் வானின் சாரதியும் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: