சம்பந்தமே இல்லாத பணியில் இருந்து சினிமாவில் சாதித்த தமிழ் நடிகர்கள்! ஆர்மிக்கு செல்ல ஆசைப்பட்ட நகைச்சுவை நடிகர் யார் தெரியுமா!

0
534

மக்களிடையே பிரபலமாவது என்பது அவ்வளவு கஷ்டம் இல்லை. ஆனால் அவர்கள் மனதில் நல்ல இடத்தைப் பிடிப்பது தான் கஷ்டம். அந்த வகையில் திரையுலகில் ஏராளமானோர் பிரபலமானதற்கு காரணம் அவர்களின் திறமை என்று சொல்லலாம்.

திறமை இல்லாமல் எப்போதும் ஒருவரால் வெற்றி பெற முடியாது. அதேப் போல் ஒருவரின் நோக்கம் உறுதியாக இருந்தால், நிச்சயம் வாழ்வில் சிறப்பான இடத்தை அடைய முடியும்.

அப்படித் தான் நம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் ஆரம்ப காலத்தில் சம்பந்தமே இல்லாத பணியில் இருந்து, பின் தங்களுடைய நோக்கம் மற்றும் கடும் முயற்சியால் தற்போது திரையுலகில் கொடிக்கட்டி பறக்கின்றனர்.

அவற்றில் சில தமிழ் நடிகர்களின் விபரம் பின்வருமாறு,

யோகி பாபு

தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகர்களில் ஒருவர் யோகி பாபு. ஆரம்பத்தில் ஆர்மிக்கு செல்ல முயற்சி செய்துள்ளார். ஆனால் அது கிடைக்கவில்லை. பல நாட்கள் கஷ்டப்பட்டு வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வந்துள்ளார்.

மம்மூட்டி

நடிகர் மம்மூட்டி ஆரம்ப காலத்தில் ஓர் வக்கிலாக இருந்தார். பின் நடிப்பின் மீதுள்ள ஆசையால் திரையுலகில் முயன்று, தற்போது மிகவும் பிரபலமான ஒருவராக உள்ளார்.

அஜித்

நடிகர் அஜித் ஆரம்பத்தில் மெக்கானிக்காக பணியாற்றினார். பின் நடிப்பின் மீதுள்ள ஆர்வத்தால், தமிழ் திரையுலகில் ஆசை என்னும் படத்தின் மூலம் நுழைந்தார். முக்கியமான விஷயம், இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து தான் தமிழ் பேசவேக் கற்றுக் கொண்டார்.

அக்ஷய் குமார்

நடிகர் அக்ஷய் குமார் முதலில் பாங்காங்கில் தற்காப்பு கலை பயின்றார். பின் இந்தியாவிற்கு வந்து தற்காப்பு கலையை பயிற்றுவித்தார். ஒருநாள் அவரது மாணவர் மாடலிங்கில் முயற்சி செய்யுமாறு பரிந்துரைக்க, அவர் அதனை முயற்சித்து தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

அரவிந்த் சாமி

அரவிந்த் சாமி ஆரம்ப காலத்தில் தொழிலதிபராக இருந்தார். பின் மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தின் மூலம் திரையுலகில் காலடி பதித்தார். இவர் அதிக திரைப்படம் நடிக்காவிட்டாலும், இவர் நடித்த படங்கள் அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன. தற்போது மீண்டும் திரையுலகில் ‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் காலடி பதித்து, முன்னணி நடிகர்களுள் ஒருவராக உள்ளார்.

மாதவன்

நடிகர் மாதவன் திரையுலகில் காலடி பதிக்கும் முன், ஆளுமை வளர்ச்சி பயிற்றாளராக இருந்தார். பின் நடிப்பின் மீதுள்ள ஆசையால், திரையுலகில் நுழைந்தார். ‘சாக்லேட் பாய்’ என்று பெண்களால் அழைக்கப்பட்டார்.

விஜய் சேதுபதி

வாழ்க்கையில் கடும் கஷ்டப்பட்டு கஷ்டம் கற்றுக்கொடுத்த பாடங்களை வெற்றி படிகளாக மாற்றிக் இன்று மக்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அவர் கடந்து வந்த பாதைகள் மிக நீண்டவை. சினிமா வாழ்க்கை என்பது கனவு என்று பல மேடைகளில் அவரே கூறியுள்ளார்.

Previous articleவிஜய்யை செம்ம கலாய் கலாய்த்த சிவகார்த்திகேயன்! இப்போது வைத்து செய்யும் ரசிகர்கள்!
Next articleலண்டனில் மசூதிக்கு வெளியே தொழுகையின் போது துப்பாக்கி சூடு!