சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் எளிய வழிகள்?

0
1109

நம் வீட்டு சமையல் அறையில் வீசும் கடுமையான துர்நாற்றத்தை போக்க அற்புதமான இயற்கை வழிகள் இதோ,

சமையல் அறையின் துர்நாற்றத்தை போக்கும் வழிகள்?

தண்ணீரை மிதமான தீயில் வைத்து, ஆரஞ்சு பழத்தின் தோல், லவங்கம் மற்றும் ஏலக்காய் ஆகியவற்றை போட்டு 2 நிமிடம் கொதிக்க வைத்து, அதை வீட்டின் மூலைகளில் வைக்க வேண்டும்.

சமையலறையில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க பிரட் ரோஸ்ட் செய்ய வேண்டும். இதனால் நாற்றம் நீங்கி, நல்ல மணமும் வீடு முழுவதும் பரவும்.

சமையல் அறையில் உள்ள துர்நாற்றத்தை போக்க பேக்கிங் சோடா உதவுகிறது. எனவே பேக்கிங் சோடாவை பயன்படுத்தினால், கெட்ட நாற்றம் வராது.

ஒரு கப்பில் எலுமிச்சை தண்ணீர் எடுத்து அதை ப்ரிட்ஜில் 10 நிமிடம் வைத்து, பின் அந்த பாத்திரத்தை வெளியே எடுத்து வைக்க வேண்டும்.

அசைவ உணவை சமைக்கும் போது கைகளில் ஏற்படும் நாற்றத்தை போக்க, சோப்பால் கையை கழுவுவதற்கு முன் சர்க்கரையை கொண்டு கழுவ வேண்டும்.

வெள்ளை வினிகரில் ஒரு துண்டு லவங்கத்தை போட்டு சமையல் அறையில் வைத்தால், வீடு முழுவதும் இனிய நறுமணம் வீசும்.

Previous articleஇன்றைய ராசிபலன் 1.7.2018 ஞாயிற்றுக்கிழமை !
Next articleமலச்சிக்கல் பிரச்சனை ஏற்பட்டால் எச்சரிக்கையாக இருங்கள்!