சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ள சட்டமா அதிபர்!பிரதமர் மாற்றம்!

0

இலங்கையில் பிரதமர் பதவி மாற்றம் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் கரு ஜெயசூரியவுக்கு இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் இதனை சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் பதவி மாற்றம் அரசியல் அமைப்புக்கு முரணானது என்ற கருத்து வெளியிடப்பட்டு வருகின்ற நிலையில் அதன் நியாயம் குறித்து விளக்கமளிக்குமாறு சபாநாயகர் கடந்த 29ஆம் திகதியன்று சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாகவே சட்டமா அதிபர் தமது கருத்தை வெளியிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பின் கீழ் இந்த விடயங்கள் தொடர்பில் சட்டமா அதிபரான தாம் கருத்து கூறுவது பொருத்தமற்றது என்று சட்டமா அதிபர் ஜயந்த ஜெயசூரிய, சபாநாயகருக்கு அறிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ்.மாவட்ட நா.உறுப்பினர்! புதிய அமைச்சராக கடமைகளை பொறுப்பேற்றார்!
Next articleவசமாக சிக்கிய குடும்பஸ்தர்! தமிழர் தலைநகரில் சுற்றிவளைக்கப்பட்ட வீடு!