நம்முடைய பிறந்த கிழமை அல்லது பிறந்த திகதி என்பது மிகவும் முக்கியமானதாகும். நாம் பிறக்கும் திகதி, கிழமை, நேரம், வருடம் என அனைத்துமே ஒவ்வொரு விதத்தில் தனித்துவம் வாய்ந்ததாகும்.
நம்முடைய எதிர்காலம், குணநலன்கள் போன்றவற்றை தீர்மானிப்பதில் இவற்றின் பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
பிறந்த திகதி என்பது நாம் பிறந்த நாளின் ஒட்டுமொத்த கூட்டுத்தொகையாகும். ஒருவரின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை கண்டறிய அவர்களின் பிறந்த எண்ணே போதும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
அதன்படி நான்காம் எண்ணின் சனிப்பெயர்ச்சி பலன்களை பார்க்கலாம்.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர்.
வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். இந்த சனிப்பெயர்ச்சியில், பொருளாதார நிலை மேம்படும்.
குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.
அதன் மூலம் வருமானமும் பெருகும். செயல்களை நேர்மையான பாதையில் செவ்வனே செய்து முடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெறுவீர்கள்.
பங்குச் சந்தை, முதலீடு இனங்கள் மூலம் திடீர் பணவரவு உண்டாகும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குலதெய்வ வழிபாடுகளைச் சிறப்பாகச் செய்வீர்கள். தர்ம காரியங்களுக்கு செலவுசெய்து மகிழ்வீர்கள். நல்ல குருநாதரிடம் தீட்சை பெறும் பாக்கியமும் உண்டாகும்.
தனித்து நின்று போட்டிகளைச் சமாளிப்பீர்கள். கடினமான காரியங்களையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிப்பீர்கள். உடல் உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய திட்டங்களைத் தீட்டி வெற்றி பெறுவீர்கள்.
உங்கள் நடையில் ஒரு மிடுக்கு உண்டாகும். அவ்வப்போது சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். வசிக்கும் வீட்டை பழுது பார்ப்பதற்குச் சிறிது செலவு செய்ய நேரிடும். மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சாதுர்யமாகச் சமாளிக்க சனி பகவான் உதவுவார்.
சிலர் புதிய இல்லங்களுக்கு மாறுவார்கள். பேராற்றல் உண்டாகும். புதிய தொழில் நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். சாமர்த்தியசாலி என்று பெயர் எடுப்பீர்கள். உற்றார், உறவினர் உதவிகரமாக நடந்து கொள்வார்கள்.
நல்ல செய்திகள் வந்தடையும். இதனால் மகிழ்ச்சிக் கடலில் திளைப்பீர்கள். உத்யோகஸ்தர்கள் கடின உழைப்பைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயலாற்றவும். சுணக்கத்திற்கும் சோம்பலுக்கும் இடம் கொடுக்காமல்
பணியாற்றினால் மேலதிகாரிகளின் ஆதரவை எளிதில் பெறலாம். எப்போதும் நிதானமாகவே பேசி சக ஊழியர்களின் அன்பைப் பெறவும். இதற்குப் பயனும் உண்டு. உடல் உழைப்பிற்கு மேல் இருமடங்கு வருமானத்தைக் காண்பீர்கள். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
பயணங்களும் பலன் தரும். வியாபாரிகளுக்குக் கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடிவடைந்தாலும் செயல்களில் கூடுதல் அக்கறை காட்டவும். மற்றபடி சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.
பரிகாரம்
ஞாயிற்றுக்கிழமையில் சிவன் கோயிலை 11 முறை வலம் வரவும். பிரதோஷ காலத்தில் நந்தீஸ்வரரை வணங்குவதும் முன்னேற்றம் தரும்.
சமூகத்தில் அந்தஸ்து, அதிகாரம் கிட்டும்.
வில்வ இலைகளை அருகிலிருக்கும் சிவனுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்யவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்
“ஓம் ஸ்ரீருத்ராய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.
அதிர்ஷ்ட எண்கள்
1, 3, 5, 9.
அதிர்ஷ்ட கிழமைகள்
ஞாயிறு
செவ்வாய்
புதன்
வியாழன்