சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.
சிம்ம லக்னகாரர்களுக்கு சனிபகவான் ஆறு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி. தற்போது ஐந்தாம் வீட்டில் உள்ள சனிபகவான் ஆறாம் வீட்டிற்கு நகர்கிறார்.
ஆறுக்கு அதிபன் ஆறாம் வீட்டில் அமர்வது விபரீத ராஜயோகம். ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும் போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும்.
லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. சிம்ம லக்னகாரர்களுக்கு மகரம் ஆறாம் பாவகம். எதிரி, நோய், கடன் ஆகிய பாவகங்களை குறிப்பது.
ஆறாம் வீட்டில் அமரும் சனிபகவான் தனது மூன்றாம் பார்வையாக மீனத்தை பார்க்கிறார்.
அது சிம்ம லக்னத்திற்கு பத்தாம் வீடு, தனது ஏழாம் பார்வையாக கடகத்தை பார்க்கிறார் அது சிம்ம லக்னத்திற்கு 12ஆம் வீடு மோட்ச ஸ்தானம் அதே போல பத்தாம் பார்வையாக துலாம் லக்னத்தின் மீது விழுகிறது இது சிம்மத்திற்கு மூன்றாம் வீடான முயற்சி ஸ்தானம். இந்த சனிப்பெயர்ச்சியால் உங்க லக்னத்திற்கு ஆறு, ஏழு, மூன்று, பத்து, 12ஆம் வீடுகள் ஆக்டிவ்வாக இருக்கும்.
சனி உங்க லக்னத்திற்கு ஆறாம் வீடு ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் இந்த வீடுகளின் காரகத்துவங்களான எதிரி நோய் கடன், சமூகம், களத்திரம், கணவன் மனைவி, தொழில் கூட்டாளிகள்.
பற்றி சுய தம்பட்டம் அடிக்காதீங்க. எதைப்பற்றியும் பெருமை பேசாதீங்க. கணவன் மனைவி பற்றி தம்பட்டம் அடிக்காதீங்க அப்புறம் சண்டை சச்சரவுகளும் கடனும் நோய்களும் அதிகம் வரும்.
நாம் எதை எல்லாம் பொறுப்பாக உணராமல் அசால்டாக இருக்கிறோமோ அங்கே சனி அமருவார். தன்னுடைய எதிரிகள் பற்றியும், கணவன் மனைவி பற்றியும் திருமண வாழ்க்கை பற்றியும் பொறுப்போடு உணர்ந்து நடந்து கொள்ள வேண்டும்.
சனிபகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு எந்த வீட்டிற்குப் போனாலும் அந்த வீட்டில் உள்ள தவறுகளை வெளிக்காட்டுவார். உடல் நலத்தில் கவனம் தேவை. அவர் நோயை வெளிக்காட்டுவார். குணப்படுத்த சுட்டிக்காட்டுவார்.
எதிரிகள் கவனம்
சிம்மத்திற்கு சனி பாப கிரகம். ஆறுக்கு அதிபதி ஆறில் வருகிறார். ஆறு ருணம் ரோகம் சத்ரு ஆறில் காரகத்துவம் உடையவர். எதிர்ப்பு போட்டிகள் விலகும். சனி ஆறாம் வீட்டிற்கு போகும் போது சாந்தத்தை கொடுப்பார். வேகமாகவும் விறுவிறுப்பாகவும் விழிப்புணர்வோடும் இருக்கணும். ஆறாம் வீடு பிரச்சினைகளை தீர்ப்பார்.
அடையாளம் காட்டும் சனி
எட்டாம் வீட்டை சனி பார்ப்பதால் உங்க உடம்பில் இருக்கும் நோய்களை வெளிப்படுத்துவார். மறைமுக எதிரிகள் யார் என்று வெளிப்படுத்தி அதை தீர்க்க வைப்பார். சங்கடங்களை சனி தீர்ப்பார். சனி பத்தாம் பார்வை உங்க ராசிக்கு மூன்றாம் இடத்தை பார்ப்பதால் தகவல் தொடர்பு விரிவடையும். சகோதர சகோதரிகளிடையே உறவுகளை அதிகரிப்பார்.
விபரீத ராஜயோகம்
போட்டிகளில் ஜெயிக்க வைப்பார். பிரயாணங்களில் வெற்றி கிடைக்கும். 12ஆம் வீடான கடகத்தை சனி பார்ப்பதால் வெளிநாடு செல்லும் யோகம் வரும். இதுநாள் வரை திருமணம், குழந்தை பிறப்பு, வேலையில் தடை இருந்தது. இனி தடைகள் விலகும். நோய்கள் விலகும் சங்கடங்கள் தீரும். தொல்லைகள் தீரும், சனிபகவான் விபரீத ராஜயோகத்தையும் எதிர்ப்புகளில் வெற்றியையும் பலத்தையும் அதிகரிக்கப் போகிறார். சுபமான சனிப்பெயர்ச்சி சந்தோஷமாக இருங்க. பணிவோடு இருங்க பாதிப்புகள் குறையும்.
பலன்தரும் பரிகாரம்
உங்க கணவன் மனைவி மீது கவனம் வையுங்கள். கடமைகளை சரியாக செய்யுங்கள். கடன் வாங்குவதில் கவனமாக இருங்கள். உங்கள் எதிரிகளைப் பற்றி கவனமாக இருங்கள். வாழ்க்கைத்துணையின் உடல் நலத்திலும் கவனம் வைத்தால் சனிபகவான் பொறுப்பாக கடந்து போவார்.
சனி உங்க ஜாதகத்தில் எங்கே அமர்ந்திருக்கிறார் என்று பார்க்கவும். அந்த வீட்டையும் கவனமாக பார்க்கவும். கஷ்டப்படுபவர்களுக்கு உணவு கொடுங்க. ஏழைகளுக்கு தானம் பண்ணுங்க. ஒருமுறை திருநள்ளாறு போய்விட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.