சனிப்பெயர்ச்சி 2020-2023 ! கும்ப லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள்! அடுத்தடுத்து லாப சனியால் காத்திருக்கும் பேரதிர்ஷ்டம்! விபரீதமும் வரும் ! எச்சரிக்கை!

0
692

சனிபகவான் திருக்கணிதப்பஞ்சாங்கப்படி தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு 2020 ஜனவரி மாதம் 24ஆம் திகதி இடப்பெயர்ச்சி அடையப்போகிறார்.

சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம்.

அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். கும்பம் லக்னகாரர்களுக்கு சனிபகவான் 12ஆம் விடான விரைய சனியாக சஞ்சரிக்கப் போகிறார்.

லாப சனி இனி விரைய சனியாக ஏழரை சனியாக சஞ்சரிக்கப் போவதால் கும்ப லக்னகாரர்களுக்கு என்ன பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

சனிபகவான் மகரம் கும்பம் வீடுகளுக்கு சனி அதிபதி. அது உங்க லாக்னத்திற்கும் விரைய ஸ்தானத்திற்கும் அதிபதி. 3 ஆண்டு காலம் மகர ராசியில் சஞ்சரிக்கிறார்.

பத்தாம் வீடு மகரம் வேலை, தொழில் 11ஆம் வீடு லாப ஸ்தானம் ஆசைகள் அபிலாஷைகளுக்கு அதிபதி. சனி பகவான் தனது சொந்த வீட்டில் விரைய ஸ்தான அதிபதி விரைய ஸ்தானத்தில் அமர்வது விபரீத ராஜயோகம்.

கும்ப லக்னத்திற்கு 12வது வீட்டிற்கு வருகிறார் சனி பகவான் வருவதால் நிறைய சுப விரையங்கள் ஏற்படும். இடமாற்றம் வீடு மாற்றம் நடைபெறும். சனிபகவான் விரைய ஸ்தானம், முதலீடும் அதிகம் செய்யும் காலம் இது.

சனிபகவான் தான் இருக்கும் வீட்டில் இருந்து தன ஸ்தானம், பணவரவு, வீடு குடும்பம், சிறப்பு ஏற்படும். வருமானம் அதிகம் வரும். விரையத்தில் அமர்வதால் அதிக செலவும் ஏற்படும் முதலீடு செய்யுங்கள்.

தேவையில்லாத பேச்சுக்களை குறையுங்கள். பணத்தை அதிகமாக செலவு பண்ணுங்க. சனி பகவான் லக்னத்திற்கு ஆறாம் வீட்டை பார்க்கிறார். வேலையில் புரமோசன் கிடைக்கும்.

போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். ஆறாம் இடம் கடன் ருண ரோக சத்து ஸ்தானம். கடன்கள் கிடைக்கும். உடல்நலத்தில் அக்கறை காட்டுங்க. நேரத்திற்கு சாப்பிடுங்க. மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க.

அதிக பலன்களும் நன்மைகளும் கிடைக்க குல தெய்வத்தை வழிபடுங்க. உங்க இஷ்ட தெய்வ கோவிலுக்கு போயிட்டு வாங்க. ஆஞ்சநேயர் வழிபாடு அற்புதத்தை தரும். காளியை வணங்குங்கள்.

பைரவர் கோவிலுக்கு போய் செவ்வரளி மாலை போட்டு வழிபடுங்க. சனிபகவானுக்கு அர்ச்சனை பண்ணுங்க. இல்லாதவர்களுக்கும் ஏழைகளுக்கும் தர்மம் பண்ணுங்க நல்லது நடக்கும். வேலையாட்களுக்கு நிறைய உதவி பண்ணுங்க நல்லது நடக்கும். இந்த சனிபெயர்ச்சியை எளிதாக கடந்து விடுவீர்கள்.

Previous article2019 நவம்பர் மாத ராசிக்கு சுக்கிரன் நன்மை செய்ய போகிறார் தெரியுமா?
Next article7 வயது சிறுவன் சாதனை! இவன் வேகத்தை பார்த்தா மிரண்டு போவீங்க.! காணொளி!