சனிபகவானை இப்படி வழிபடுவது உங்களுக்கு சனிபகவானின் சாபத்தை பெற்றுத்தரும் தெரியுமா?

0
1017

இந்து மதத்தில் அனைவரும் கண்டு நடுங்கும் ஒரு கடவுள் என்றால் அது சனிபகவன்தான். ஏனெனில் வாழும்போதே நமக்கு நரகத்தை காட்ட இவரால்தான் முடியும். நமது தவறுகளுக்கான தண்டனைகளை வாழும் போதே வழங்கும் இவரை கண்டு பயப்படுவதில் தவறு எதுவுமில்லை.

ஒழுக்கமான வாழ்க்கை முறையும், முறையான வழிபாடும் நம்மை சனிபகவானின் கோபப்பார்வையில் இருந்து பாதுகாக்கும். சனிபகவானை வழிபடும் போது மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் தவறான வழிபாடும் சனிபகவானின் கோபத்தை தூண்டும். இந்த பதிவில் சனிபகவானை எப்படி வழிபட வேண்டும் என்று பார்க்கலாம்.

பொதுவாக கடவுளை வணங்கும் போது நேருக்கு நேர் நின்று கையெடுத்து கும்பிட்டு நம்முடைய வேண்டுதல்களை கூறுவோம். ஆனால் சனிபகவானை பொறுத்தவரை இவ்வாறு வழிபடக்கூடாது. ஏனெனில் வேதங்களில் சனிபகவானை நேரடியாக நின்று பார்க்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது. சனிபகவானின் பார்வையை தடுக்கும் விதமாக அவருக்கு எதிரில் நிற்பது சனிபகவானின் கோபத்தை தூண்டும்.

சாஸ்திரங்களின் படி சூரிய பகவான் இல்லாத நேரங்களில் மட்டுமே சனிபகவானின் கோவிலுக்கு செல்ல வேண்டும். ஒன்று சூரியன் உதிப்பதற்கு முன் செல்ல வேண்டும் அல்லது சூரியன் மறைந்ததற்கு பிறகு செல்ல வேண்டும். சனிபகவான் அவருடைய தந்தையான சூரியபகவான் முன்னிலையில் எவரையும் ஆசீர்வதிக்கமாட்டார். அவர் முன் தன்னை வழிபடுவதை அவர் ஒருபோதும் விரும்பவில்லை.

சனிபகவானை மற்ற கடவுள்களை போல கைகூப்பி வணங்கக்கூடாது. சனிபகவானை வழிபடும் போது கையெடுத்து கும்பிடுவதை தடுக்கவும், மாறாக தலை வணங்கியபடி கைகளை பின்புறம் வைத்து கொண்டுதான் வழிபட வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

சனிபகவான் முன்னிலையில் ஒருபோதும் தவறான வாக்குறுதிகளை வழங்கவோ அல்லது அவரின் ஆசீர்வாதத்தை பெறுவதற்காக பொய்யான தர்மங்களில் ஈடுபடவோ கூடாது. தனது முன்னிலையில் தவறான செயல்களில் ஈடுபடுவதையோ அல்லது பொய் கூறுவதையோ சனிபகவான் விரும்பமாட்டார். சனிபகவானை வழிபடுவதற்கு முன் ஆஞ்சநேயரை வழிபடவும். ஆஞ்சநேயரின் வார்த்தையை ஒருபோதும் சனிபகவான் மீறமாட்டார் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

உங்கள் பின்பற்ற முடியாத எந்த சத்தியத்தையும் சனிபகவான் முன்னிலையில் செய்யாதீர்கள். சனிபகவானின் கோபத்தில் இருந்து தப்பிக்க உதவும் அடிப்படை குணமே நேர்மைதான். அதையும் மீறி செய்தால் சனிபகவானின் சாபத்திற்கு ஆளாக நேரிடும்.

Previous articleமனைவி கர்ப்பமாக இருக்கும் காலத்தில் கணவர் உயிரிழப்பது ஏன்?
Next articleஉங்கள் பிறந்த தேதியின் படி உங்கள் ஆன்மாவுடன் தொடர்புடைய சக்திவாய்ந்த மிருகம் எது தெரியுமா?