சந்திரமுகி‍(2) படத்தில் நானா? – ஜோதிகா விளக்கம்!

0
701

சந்திரமுகி‍(2) படத்தில் நானா? – ஜோதிகா விளக்கம்!

சந்திரமுகி 2 படத்தில் ஜோதிகா நடிக்க போவதாக செய்திகள் வெளியான நிலையில், ஜோதிகா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

ரஜினிகாந்த்,பிரபு , ஜோதிகா, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் உருவான சந்திரமுகி திரைப்படம் 2005‍ ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்பொழுது சந்திரமுகி இரண்டாம் பாகம் கதை தயாராக உள்ளதாகவும் வேட்டையன் மன்னனுக்கும், சந்திரமுகிக்கும் நடக்கும் மோதலை படமாக்குவதாகவும்,மேலும் வேட்டையனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார் என்றும் இயக்குனர் பி.வாசு தெரிவித்துள்ளார்.

சந்திரமுகியாக ஜோதிகாவை இரட்டை வேடத்தில் நடிக்கவைக்க போவதாக செய்திகள் வெளியாகியுள்ள‌ன. இதுகுறித்து ஜோதிகா “சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க, என்னை யாரும் கூப்பிட‌வில்லை. அந்த கதாபாத்திரத்தில் யார் நடித்தாலும் அவர்களுக்கு என் வாழ்த்துகள்” என கூறியுள்ளார்.

By: Tamilpiththan

Previous articleகொரோனா நோயாளிகளுக்கு உள்ளாடையுடன் சிகிச்சை..! வைரலான புகைப்படம்!
Next articleஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசையில், கவுதம் மேனனின் “கார்த்திக் டயல் செய்த எண்‍- குறும்படம்” !