சகுனி வனிதாவால் பிரபல டிவிக்கு அடித்த அதிர்ஷ்டம்! இந்த வாரம் வெளியேறப்போவது இவர்தான்? இலங்கையார்களின் தற்போதைய நிலை!

0
426

பிரபல தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பட்டு வருகிறது.

முதலாவது, இரண்டாவது சீசன்கள் நிறைவு செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிலையில் குறித்த நிகழ்ச்சியில் இம்முறை இலங்கையர்கள் இருவர் பங்கேற்றுள்ளனர்.

பிக் பாஸ் 3 வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று கண்டுபிடித்துவிட்டார்கள் நெட்டிசன்கள்.

போட்டியாளர்கள் சக போட்டியாளர்களை நாமினேட் செய்துள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என்று எங்களுக்கு தெரியுமே என்கிறார்கள் நெட்டிசன்கள்.

அந்த போட்டியாளர் வேறு யாரும் இல்லை ஜாங்கிரி மதுமிதாவாம். அது ஏன் மதுமிதா வெளியேறுகிறார் என்பதற்கு அவர்கள் காரணமும் வைத்துள்ளனர்.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள் மதுமிதாவையே டார்கெட் செய்கிறார்கள். மதுமிதா நல்லது செய்திருக்கலாம். ஆனால் அதை எல்லாம் நிகழ்ச்சியில் காட்டாமல் அவர் பேசிய, செய்த கெட்டதை மட்டுமே காட்டுகிறார்கள்.

ஒரு இரண்டு நாள் வனிதா திட்டியதற்கே அதை தாங்க முடியாமல் மதுமிதா தனியாக அமர்ந்து தானாக புலம்புகிறார். இவரெல்லாம் எப்படி பிக் பாஸ் வீட்டில் தாக்குப்பிடிக்க முடியும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இயக்குநர் சேரன், லாஸ்லியா, தர்ஷன், சாக்ஷி ஆகியோர் கடைசி வரை வருவார்கள் என்பதும் நெட்டிசன்களின் கணிப்பு.

இதேவேளை, வனிதாவை வைத்து எவ்வளவு டி.ஆர்.பி.யை ஏற்ற முடியுமோ அந்த அளவுக்கு ஏற்றிவிட்டு பேக்கப் செய்துவிடுவார்கள். பிக்பாஸ் வீட்டில் சகுனி போல தெரியும் வனிதாவை பிரபல டீவி அழைத்த நோக்கமும் இதுதான்.

வனிதா இருக்கும் வரை நிச்சயம் பார்வையாளர்களின் பார்வை பிரபல தொலைக்காட்சி மிதுதான் இருக்கும். அவரை நீக்கி விட்டால் பிக்பாஸ் வீட்டில் சுவாரஷ்யம் குறைந்து விடும் என்பதும் மறுக்க முடியாத உண்மையே.

சண்டக்கோழியான மீரா மிதுனுக்கும் அதே கதி தான். சாண்டி மாஸ்டரால் தான் பல பேருக்கு பொழுது போகிறது.

அதனால் அவரும் பிக் பாஸ் வீட்டில் பல வாரங்கள் இருப்பார். கவினை அவரால் முடிந்த அளவுக்கு கடலை போட வைத்து, காதல் கதைகளை உருவாக்கி, அதை அத்துவிட்டு அவரை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

பாத்திமா பாபுவுக்கு இப்பவே டாஸ்க் செய்ய முடியவில்லை. அவரால் கடினமான டாஸ்குகளை நிச்சயம் செய்ய முடியாது. அதனால் டாஸ்குகள் கடினமாகும்போது அவரையும், சீனியர் சிட்டிசன்களான சரவணன், மோகன் வைத்யா ஆகியோரையும் வெளியேற்றிவிடுவார்கள்.

ரேஷ்மா, அபிராமியை ஒப்புக்குச்சப்பானியாக வைத்துள்ளார் பிக் பாஸ். அதனால் அவர்களாலும் தாக்குப்பிடிக்க முடியாது என்று விமர்சிக்கப்படுகிறது.

Previous articleலொஸ்லியாவின் இன்னொரு முகத்தை இனிமேல் தான் பார்க்கப் போறீங்க! தாடி பாலாஜி அதிரடி!
Next articleஆண்கள் போட்ட பெண் வேஷத்தில் கிழிக்கப்பட்ட பிரபல பெண் போட்டியாளரின் முகத்திரை.