கோயில் கோபுரத்தை மட்டும் பார்த்து வணங்கி விட்டு செல்வது சாலைப் பயணத்தில் கோயிலை கடக்கும் போது சாமி கும்பிடுவது முறையா?

0

இன்றைய அவசர உலகில் பலரால் தினமும் கோயிலுக்கு செல்ல முடிவதில்லை. ஆனால் அலுவலகம் செல்லும் போது வழியில் உள்ள ஆலயங்களைக் கடக்கும் தருணத்தில் கடவுளை நினைத்து கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள்?

கோயிலுக்குள் சென்று இறைவனுக்கு உரிய மரியாதை கொடுத்து அவர் முன் நின்று பிரார்த்திப்பதற்கு பதிலாக சாலையில் போகிற போக்கில் கோயில் கோபுரத்தை மட்டும் பார்த்து வணங்கி விட்டு செல்வது தெய்வத்தை அவமதிப்பது போல் ஆகாதா?

பதில்: கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என முன்னோர்கள் கூறியுள்ளனர். எனவே, தூரத்தில் இருந்தோ அல்லது பயணத்தின் போது கோபுரத்தை பார்த்து இறைவனை மனதில் நினைத்து தரிசித்தால் அதற்கும் உண்டான பலன் கிடைக்கும்.

நெஞ்சகமே கோயில்; நினைவே சுகந்தம்…

அன்பே மஞ்சன நீர்; பூசை கொள்ள வாராய் பராபரமே…

என்று தாயுமானவர் பாடியுள்ளார். மனதிற்கு உள்ளேயே ஈசனை நினைத்து வழிபடும் போதுதான் இந்தப் பாடலை அவர் பாடினார். இதுபோல் இறைவனை உண்மையாக மனதில் நினைத்து 10 நொடிகள் வணங்கினாலும் அதற்கான பலன் உண்டு. திருவண்ணாமலை போன்ற கோயில்கள் நினைத்த உடனேயே முக்தி தரும் ஸ்தலங்கள் என்று சங்க கால நூல்களில் கூறப்பட்டுள்ளது.

இருக்கும் இடம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் மனம் இறைவனை நினைத்து வழிபட்டால் அருள் கிடைப்பது நிச்சயம். பயணத்தின் போது இறைவனை வணங்கினாலும் முழு மனதுடன் வணங்க வேண்டும். பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை அடித்துக் கொண்டு பெயருக்கு கன்னத்தில் போட்டுக் கொள்வதால் நிச்சயம் எந்தப் பலனும் கிடைக்காது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒருவருடைய ஜாதகத்தில் மனைவிக்கு கண்டம் எனக் கூறப்பட்டிருந்தால் அதனை மாற்ற முடியுமா? முதல் மனைவி இறந்துவிடுவாரா !
Next article14 வயதில் நடிக்க வந்த ராதாவின் மகளா! என்ன இப்போ இப்படி இருக்காங்க…