கோபத்தில் கொந்தளித்துப்போயுள்ள யாஷிகா ஆனந்த் – குழப்பம் செய்யும் ரசிகர்கள் !

0
351

திரைத்துறையில் ஒரு நடிகையாக கால் பதித்து ரசிகர்களிடம் அறிமுகம் பெற்றாலும், இந்தியத் துணைக்கண்டம் தாண்டி உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் எல்லோருக்கும் பரிச்சயமான ஒருவராக ‘பிக்பாஸ்’ மூலம் புகழடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழில் “நோட்டா”, “ஜாம்பி” ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தாலும், அந்தப் படங்கள் பெரிய அளவில் பேசப்படாததால் படவாய்ப்புகள் அதிகம் கிடைக்காமல் இருந்தாலும், சமூக வலைத்தளங்கள் மூலமாக தனது கவர்ச்சிப் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டு எப்போதும் தன்னை பிரபலப்படுத்திக்கொள்ள தவறுவதில்லை.

இந்தநிலையில், இன்ஸ்ட்ராகிராம் சமூக வலைத்தளத்தில் யாஷிகா பகிர்ந்துகொண்ட புகைப்படம் ஒரு தற்போது எல்லோராலும் பேசப்படும் ஒரு விடயமாக மாறியுள்ளது. யாசிக்காவின் அந்த கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து தமது கருத்தை பதிவிட்ட சிலர், அந்தப் படத்தில் யாஷிகாவை பார்க்கும்போது நீலப்பட நடிகை மியா கலீபா போன்று தோற்றமளிப்பதாக விமர்சித்திருந்தனர். இதனால், கொதித்துபோயுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

அண்மையில் பத்திரிகையாளர் ஒருவர் இது பற்றி யாஷிகா ஆனந்த்திடம் கேட்டபோது “என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகமாக திட்டினேன். எனக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஒருவருடன் என்னை ஒப்பிட்டு பேசுவதை என்னை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக மன உளைச்சலாக உள்ளது” என்கின்றார் யாஷிகா.

Previous articleவெளியாகின்றது “சைரா நரசிம்ம ரெட்டி” ட்ரெய்லர் – எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !
Next articleவிக்னேஷ் சிவனின் மறக்கமுடியாத பிறந்தநாள் நயனுடன்!