நாடாளவிய ரீதியில் தாதியர்கள் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஷ்கரிப்பு காரணமாக இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த 45 வயதான இரேஷான என்ற இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
மூளையில் ஏற்பட்ட கட்டி ஒன்றினால் தனியார் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது தாதியர்கள் பணி பகிஷ்கிரப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அங்கு அவருக்கு மருந்து வழங்காமையினாலேயே அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இரண்டு நாட்களாக மனைவிக்கு மருந்து வழங்கவில்லை என சட்ட வைத்தியர் தன்னிடம் குறிப்பிட்டதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குறிப்பிட்டுள்ளர்.
இதுவொரு கொலை என அவரது கணவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் இந்த குற்றச்சாட்டினை வைத்தியர்கள் நிராகரித்துள்ளனர்.




