கொழும்பு தனியார் வைத்தியசாலையில் காலில் விழுந்து நன்றி தெரிவித்து தந்தை!

0
479

பேஸ்புக் ஊடாக அண்மைய நாட்கள் முழுவதும் அதிக அவதானம் செலுத்தப்பட்ட சிறுமிக்கு வெற்றிகரமாக இதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதயத்தில் ஓட்டையினால் பாதிக்கப்பட்டிருந்த நான்கு வயதான டெனாரா மிஹேலி சிறுமிக்கு நடத்தப்பட்ட சத்திரசிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக தந்தை டயான் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தனது பேஸ்புக் தளத்தில் சிறுமியின் தந்தை இது தொடர்பான பதிவொன்றை இன்று வெளியிட்டுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சத்திரசிகிச்சைக்கு அவசியமான பணம் மற்றும் இரத்தம் தேடுவதற்கு உதவிய அனைவருக்கும் தானும், மகளும் காலில் விழுந்து நன்றியை தெரிவித்து கொள்வதாக தந்தை தெரிவித்துள்ளார்.

மேலும், மகளின் சத்திரசிகிச்சை பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் அவர் இந்த பதிவை பதிவிட்டுள்ளார்.

Previous articleசர்வதேச இளம் இளம் விஞ்ஞானிகளுக்கான போட்டியில் இலங்கை 3 தங்கப்பதக்கம்!!
Next articleஅமிலத்தில் மூழ்கடிக்கப்பட்ட மாணவர்களின் சடலங்கள்!!