கொழும்பு உட்பட தென்னிலங்கையின் கரையோர பகுதியில் வாழும் மக்களுக்கு வளிமண்டவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிரதேசங்களில் கடல் அலை வழமையை விட உயர்வடையும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
குறித்த பிரதேசங்களில் கடலலை 2.5 மீற்றர் அல்லது 3 மீற்றர் வரை இரவு 7 மணி முதல் இவ்வாறு உயர்வடையக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இதனால் கடலோர வாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதனமாக செயற்படுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.





