கொழும்பு இளைஞருக்கு நள்ளிரவில் நேர்ந்த கதி!

0
403

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்தில் பயணித்த இளைஞரொருவர் நேற்று நள்ளிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞர் கேரள கஞ்சாவினை கடத்தி சென்ற குற்றச்சாட்டிலேயே வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து நொச்சிமோட்டை பகுதியில் வழிமறித்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இதன்போது அந்த பேருந்தில் பயணித்த கொழும்பை சேர்ந்த சத்தியவேல் சஞ்சீவன் (19 வயது) என்ற இளைஞர் 6 கிலோகிராம் கேரளா கஞ்சாவுடன் கைதாகியுள்ளார்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

Previous articleஇளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி! யாழில் நடந்த பயங்கர சம்பவம்!
Next articleநிலானியின் மீது தவறு என விளாசிய நடிகை! இதற்கு ஆதாரம் நெருக்கமான புகைப்படங்களே!