கொழும்பு அரசியலில் இன்று ஏற்பட்ட திடீர் மாற்றம்!

0

கூட்டணி அரசாங்கத்தின் அமைச்சரவை முதல் முறையாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் இல்லாமல் கூடியுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் அமைச்சரவை குழுக் கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கூட்டத்தில் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் பங்கேற்கவில்லை என அறிய முடிகின்றது.

இன்றைய அமைச்சரவை கூட்டத்தை புறக்கணிப்பதாக நேற்று இடம்பெற்ற கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் தீர்மானித்ததாக சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர்.

எவ்வாறாயினும், இன்றைய அமைச்சரவை கூட்டம் சுமூகமாக இடம்பெற்றதாக அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

Previous articleவெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!
Next articleசண்டை போட்ட அபர்ணதிக்கு மட்டும் ஆர்யா செய்த ஸ்பெஷல் விஷயம் – மற்ற பெண்கள் ஷாக்!