கொழும்பில் பெற்றோர் – யாழில் தூக்கில் தொங்கிய மகன் – கொலையா தற்கொலையா?

0
435

யாழ்ப்பாணத்தில் மாணவன் ஒருவன் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

15 வயது மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக கோப்பாய் வைத்தியசாலை வைத்தியர்கள் தெரிவித்தனர்.

நீர்வேலி தெற்கு நீர்வேலியைச் சேர்ந்த 15 வயதான பிராபாரகரன் துபாரகரன் என்ற மாணவனே நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

மாணவனின் மரணம் தொடர்பாக விசாரணையை யாழ்ப்பாணம் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.

துபாரகரனின் பெற்றோர் கொழும்பில் வசித்து வருகின்றனர். துபாரகரன் உறவினர்களுடன் நீர்வேலியில் வசித்து வந்தார்.

துபாரகரன், நீர்வேலி சோமஸ்கந்தா பாடசாலையில் ஜி.சி.ஈ சாதாரண தரத்தில் கல்வி கற்கிறார். நேற்றுமுன்தினம் துவாரகனின் தாய் அவனுடன் தொடர்பு கொண்டுள்ளார்.

துபாரகரனை சாதாரண தரப் பரீட்சைக்குத் தயார்ப்படுத்த வேண்டும் என்றும் தான் யாழ்ப்பாணம் வருவுள்ளதாகவும் கூறியுள்ளார். இந்நிலையில் துபாரகரன் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த மாணவன் எந்தவிதமான அழுத்தங்களும் இன்றி சந்தோஷமாக இருந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மாணவனின் திடீர் மரணம் குறித்து உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இதுவொரு கொலையா அல்லது தற்கொலையா என்ற ரீதியில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous articleஉங்கள் முகத்தின் வடிவம்; உங்கள் குணங்களை பற்றி, என்ன கூறுகிறது?
Next articleவடகொரிய தலைவர் உரையின் போது தூங்கிய அதிகாரி: இவ்வளவு பயங்கர தண்டனையா?