கொழும்பு – ராஜகிரிய, பழைய கோட்டை வீதி பிரதேசத்தில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில் இயங்கிய பாலியல் தொழில் விடுதி ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 5 பெண்களை கைது செய்துள்ளனர்.
வெலிக்கடை பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து நீதிமன்ற அனுமதியுடன் நேற்று மாலை இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாலியல் தொழில் விடுதியின் பெண் முகாமையாளர், விடுதியை நடத்திச் செல்ல உதவிய 4 பெண்கள் என மொத்தமாக 5 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் 24, 25, 26 மற்றும் 29 வயதானவர்கள் எனவும் இவர்கள் மட்டக்களப்பு, சூரியவெவ, கந்தானை, வெல்கம ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதுடன், வெலிக்கடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.