கொலுவில் ஒன்பது படிகள் அமைப்பது ஏன் தெரியுமா? அவற்றிற்கு அர்த்தம் தெரியுமா?

0
621

மனிதன் தன் வாழ்நாளில் எப்படியாவது படிப்படியாக முன்னேறி இறைவனை சென்றடைய வேண்டும் என வாழ்ந்து வருகிறான், இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவமுமாகும்.

இந்த தத்துவத்தை விளக்கும் வகையில் தான் நவராத்திரி கொலு வைப்பதில் ஒன்பது படிகள் அமைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபட்டு வருகிறோம்.

முதலாம் படி
ஓரறிவு உயிர்களான புல், செடி, கொடி போன்ற தாவரங்களின் பொம்மைகள்.

இரண்டாம் படி
ஈரறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள்.

மூன்றாம் படி
மூன்றறிவு உயிர்களான கறையான், எறும்பு போன்ற வற்றின் பொம்மைகள்.

நாலாம்படி
நான்கறிவு உயிர்களை விளக்கும் நண்டு ,வண்டு போன்றவற்றின் பொம்மைகள்.

ஐந்தாம்படி
ஐந்தறிவு உள்ள மிருகங்கள், பறவைகள் ஆகி யவற்றின் பொம்மைகள

ஆறாம்படி
ஆறறிவு மனிதர்கள் பொம்மைகள்.

ஏழாம்படி
மனித நிலையிலிருந்து உயர்நி லையை அடைந்த சித்தர்கள், ரிசிகள், மகரிசிகள் (ரமணர், வள்ளலார்) போன்றோரின் பொம்மைகள்.

எட்டாம்படி
தேவர்கள், அட்டதிக்பாலர்கள், நவக்கிரக அதிபதிகள் போன்ற தெய்வங்கள் தேவதைகள் போன்றோரின் பொம்மைகள்.

ஒன்பதாம்படி
பிரம்மா, விட்ணு, சிவன் ஆகியோர் அவர்களின் தேவியருடன் நடுநாயகமாக ஆதிசக்தி வை க்கவேண்டும்.

மனிதன் படிப்படியாக உயர்ந்து தெய்வ நிலை யை அடைய வேண்டும் என்பதற் காகவே இப் படி கொலு அமைப்பது வழக்கம்.

Previous articleரத்த அழுத்த நோய் அதனால் ஏற்படும் மயக்கமும், தலை சுத்தலும் உடனே குணமாகும்!
Next articleவிநாயகருக்கு உரிய மந்திரம்! அதற்கான‌ அர்த்தம் தெரியுமா?