பழம்பெரும் நடிகை மரணம்
ஒவ்வொரு வருட இறுதியிலும் மழை, புயல். வெள்ள பாதிப்புகள் தமிழகத்தில் நேர்வது உண்டு. ஆனால் கடந்த 2019 இறுதியில் அப்படியாக எதுவும் இல்லையே என நிம்மதி பெரு மூச்சுவிட்ட நேரத்தில் இந்த 2020 3 மாதங்களை முழுமையாக கடக்கும் முன்னரே சத்தமில்லாமல் புகுந்துள்ள கொரோனா வைரஸ் நோய் பலருக்கும் எதிர்பாராத பெரும் அதிர்ச்சி தான்.
இதனால் பல மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்கதை தொடர் கதையாகியுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட்டை சேர்ந்த பிரபல நடிகையும் எழுத்தாளருமான பாட்ரிசியா போஸ்வார்த் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சமீபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த ஏப்ரல் 2 ல் இறந்துவிட்டதாக தற்போது செய்தி வெளியாகியுள்ளது.
பழம் பெரும் நடிகையான அவருக்கு வயது 86.