கொமடி மன்னன் யோகி பாபுவிற்கு திருமணமா! அவரே கூறிய தகவல்!

0
474

தமிழில் எண்ணெற்ற காமெடி கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்து வருபவர் காமெடி நடிகர் யோகி பாபு. இவரது உண்மையான ப்ளஸ்ஸே இவரது உருவ அமைப்பு என்றே கூறலாம். உண்மையான சினிமா ரசிகர்களுக்கு இவரது தோற்றம் பிடித்து போக இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் கூடி வருகிற்து. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் யோகிபாபு.

மேலும், அஜித், விஜய் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு. அதுமட்டும் இல்லாமல் தனி ஒரு நடிகராகவும் ஒருசில படங்களில் நடித்துவருகிறார்.

இந்நிலையில் நடிகர் யோகி பாபுவிற்கு விரைவில் திருமணம் என்ற தகவல் வைரலாகி வருகிறது. இதுகுறித்து கூறிய யோகிபாபு, திருமணம் நடக்கும் போது கண்டிப்பாக அனைவரிடமும் சொல்வேன்.

என் அம்மா பெண் பார்த்து வருகிறார். அதற்காக தான் வீட்டிற்கு வந்துள்ளார் என தன்னுடைய திருமணம் குறித்து முதல் முறையாக பகிர்ந்துள்ளார் யோகிபாபு. இதற்கு இப்போதே முறையாக ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க துவங்கிவிட்டனர்.

Previous articleஹீரோவாக மாறி அப்பா மீது புகார் கொடுத்த சிறுமி! கிராமத்துக்கே அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்!
Next articleநடிகர் சாந்தனுவின் மற்றொரு முகம்! பாருங்க நிச்சயம் ஷாக் ஆவீங்க!