கேரளாவை சேர்ந்த 35 வயது சீரியல் நடிகை கவிதா எரிந்த நிலையில் பிணமாக கண்டுபிடிக்கப்பட்டார். இவர் தற்கொலை செய்துக்கொண்டார், என கூறப்பட்டு வந்த நிலையில் இவரை யாராவது எரித்து கொலை செய்திருப்பார்களோ என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
கவிதா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தன்னுடைய நான்கு வயது மகளுடன் மலப்புரம் பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய குழந்தையை உறவினர் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார். பின்பு உறவினர் வீட்டிக்கு சென்ற குழந்தை தன் வீட்டிற்கு செல்ல வேண்டும் என அடம்பிடித்ததால் உறவினர்கள் இவருடைய வீட்டிற்கு குழந்தையை அழைத்து வந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது கவிதா எறிந்த நிலையில் பிணமாக கிடந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும், கவிதாவின் வீடு உள்பக்கம் தாழிடப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
இவருடைய மரணம் குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில், கவிதா பெங்களூரின் அழகு நிலையம் திறக்க ஏற்பாடு செய்து வந்ததாகவும், அதற்கு தேவையான பணம் கிடைக்காததால்… மனமுடைந்து இப்படி ஒரு முடிவை எடுத்ததாக முதல் கட்ட விசாரணையில் கூறப்பட்டது.
ஆனால், தொடர்ந்து விசாரணை செய்ததில் இவரை யாரேனும் எரித்து கொன்றார்களா என்கிற கோணத்தில் விசாரணை செய்து வருவதாகவும், அதற்கான சில ஆதாரங்கள் சிக்கி உள்ளது போன்றும் போலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.