கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்.! ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை!

0
397

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம் தொடுபுழாவை அடுத்துள்ள வண்ணப்புரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். 62 வயதான இவருக்கு 53 வயதில் சுசீலா என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதிக்கு 20 வயதில் ஆர்ஷா என்ற மகளும் 17 வயதில் ஆதர்ஸ் என்ற மகனும் இருந்தனர். கடந்த 2 நாட்களாக கிருஷ்ணனின் வீட்டில் ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது.

இதனால் சந்தேகமுற்ற அக்கம் பக்கத்தினர் கிருஷ்ணன் இல்லத்தை திறந்து பார்த்த போது, அவரது வீட்டிற்கு பின்புறம் கிருஷ்ணன் உள்ளிட்ட நால்வரும் கடுமையாகி தாக்கி கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட கிருஷ்ணன் மாய மந்திரங்களில் நம்பிக்கை உடையவர் எனவும், சூனியம் உள்ளிட்ட விஷயங்களை செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. அதற்காகவே பழி தீர்க்க இச்சம்பவம் நடந்திருக்கலாமோ எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் சோதனையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு 4 பேரும் கொல்லப்பட்டுள்ளனர் என தெரியவந்துள்ளது. கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த கொலை குறித்து விசாரிக்க தொடுபுழா துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

Previous articleஎன்னதான் நடக்கின்றது ஈழத்தில்! முல்லைத்தீவில் சிறுவன் நரபலி?
Next articleநம்பிச் சென்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயரம்! காதலியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கொடூரன்!