கூரிய ஆயுதத்தினால் வயோதிபப் பெண் வெட்டிக் கொலை!
இரத்தினபுரி, மல்வல பிரதேசத்தில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வயோதிபப் பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
83 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் தொடர்பான முதல் கட்ட நீதவான் விசாரணைகளும், பிரேத பரிசோதனைகளும் இன்று நடைபெறவிருந்தது என பொலிஸ் ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
சம்பவம் குறித்து இரத்தினபுரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.