கூடா நட்பு! மகளை துடிதுடிக்க கொலை செய்தது ஏன்! தாயின் அதிர்ச்சி வாக்குமூலம்!

0

நீலகிரி மாவட்டத்தில் தனது 11 வயது மகளை கொலை செய்த தாயை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜெகநாதன் – ராஜலட்சுமி தம்பதியினருக்கு மகள்11 வயதில் உஷாராணி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி கூடா நட்பு வைத்திருந்த காரணத்தால், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

ஆனால், ராஜலட்சுமி தனது கூடாநட்பை கைவிடாத காரணத்தால் கணவர் ஜெகநாதன் பிரிந்து சென்றுள்ளார்.

இதனால், ராஜலட்சுமி தனது மகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தனது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றத்திற்காக ராஜலட்சுமி கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் பொலிசில் அளித்துள்ள வாக்குமூலத்தில், நான் கூடாநட்பில் இருந்த விவகாரம் எனது மகளுக்கு தெரிந்துவிட்டது. இதனை தனது பாட்டியிடம் சொல்லிவிடுவேன் என மிரட்டினாள்.

இது வெளியில் தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என பயந்து அவளது கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

ராஜலட்சுமியைக் கைது செய்து கோவை சிறையில் அடைத்துள்ளனர்.

Previous articleஜெனிவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை! பரபரப்பாகும் ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு வளாகம்!
Next articleபொள்ளாச்சி திருநாவுக்கரசு அதிரடி வாக்குமூலம்! சிக்கும் பிரபலம்! அவரின் புகைப்படம் வெளியானது!