குஷியில் கவிலியா ஆர்மி! இன்ஸ்டாகிராமில் தொடரும் கவின்னூம் லாஸ்லியாவின் காதல்.

0

குஷியில் கவிலியா ஆர்மி! இன்ஸ்டாகிராமில் தொடரும் கவின்னூம் லாஸ்லியாவின் காதல்.

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் தான் வெற்றிகரமாக சிறப்பாக முடிவடைந்தது. மேலும்,இந்த பிக் பாஸ் சீசன் 3 மேலும்,இந்த மத்த இரண்டு சீசன்களை விட மாஸ் காட்டியது. அதோடு இந்த பிக் பாஸ் 3ல் நடந்த சர்ச்சைகளுக்கும், காதல்களுக்கும் பஞ்சமே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு நிகழ்ச்சியில் பூகம்பமே கிளம்பியது. அதிலும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இந்த அளவிற்கு பட்டையைக் கிளப்பியதற்கு காரணம் என்று பார்த்தால் அது ‘கவின், லாஸ்லியா’ காதல் தான். முதலில் இவர்கள் இருவரும் நண்பர்களாகத் தான் இருந்தார்கள்.

பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இருவருக்கும் காதல் மலர்ந்தது. மேலும்,இதுவரை வந்த பிக் பாஸ் சீசன் நிகழ்ச்சிகளிலேயே கவின்,லாஸ்லியா காதல் வேற லெவல். தற்போது கூட இவர்கள் இருவரும் ‘காதல் காவியங்கள்’ என ரசிகர்கள் கூறிவருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் கவின், லாஸ்லியா காதல் குறித்து சமூக வலைதளங்களில் பல விதமான கருத்துக்கள் எழுந்த வண்ணம் உள்ளன. மேலும்,ரசிகர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கும் போதே “கவிலியா” என்ற ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி இவர்கள் சம்பந்தமான புகைப்படங்களையும், கருத்துக்களையும் பதிவிட்டு வந்தார்கள். எப்போவுமே நிகழ்ச்சியில் இருக்கும் வரை தான் காதல்,சண்டைகள் பற்றி பேசுவார்கள். ஆனால்,இந்த சீசன் காதல் மட்டும் தான் நிகழ்ச்சி முடிந்தும் ட்ரெண்டிங்கில் போய் கொண்டு உள்ளது.


அதிலும் கவின், லாஸ்லியா பற்றி சொல்லவே வேண்டாம். அந்த அளவிற்கு இவர்கள் காதல் குறித்து ரசிகர்கள் வெறித்தனமாக உள்ளார்கள். மேலும், இவர்கள் திருமணம் பற்றி கவின், லாஸ்லியா யோசிப்பதை விட இவர்களுடைய ரசிகர்கள் தான் அதிகம் ஆர்வமாக உள்ளனர். அதுமட்டும் இல்லாமல் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் இவர்களுடைய காதல் குறித்து ஆவலாக எதிர்நோக்கி உள்ளார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்தே. ஆனால், கவினும் லாஸ்லியாவும் இது குறித்து எதையும் பேசவில்லை. மேலும், எல்லா நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் தனியாகவே சென்று கலந்து கொண்டார்கள். அதோடு சமீபத்தில் நடந்த பிக்பாஸ் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தான் கவின்,லாஸ்லியா இருவரும் சேர்ந்து கலந்து கொண்டார்கள்.

அதில் கவின் பிக் பாஸ் அனுபவத்தை பற்றி பேசும் போது ரசிகர்கள் கவினை பேசவிடாமல் கைத்தட்டல் கொடுத்து ஆரவாரம் செய்து வந்தார்கள். மேலும்,கவினுக்கு குவிந்த பாராட்டு மழையை பார்த்த லாஸ்லியா கண் கலங்கி நின்றார். மேலும், ரசிகர்கள் இவர்கள் காதல் குறித்து இப்போதுஆவது பேசுவார்கள் என ஆர்வமாக இருந்தனர். ஆனால், அந்த மாதிரி எந்த தகவலும் வெளிவரவில்லை. அதோடு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே லாஸ்லியா எங்கள் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என்று கூறியிருந்தார். அதனால் தான் இருவரும் பொறுமையாக இருக்கிறார்களா!!என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் காதல் குறித்து பல கலவையான விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து இருந்தாலும் தற்போது இலங்கை லாஸ்லியா கருப்பு வண்ண ஆடை அணிந்த அழகிய புகைப்படம் ஒன்றை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பயங்கர குஷியில் லைக்குகளை குவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் லாஸ்லியாவை மாதிரி கருப்பு வண்ணம் ஆடையை அணிந்து புகைப்படத்தை கவின் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் இவர்களுடைய இரண்டு புகைப்படங்களையும் இணைத்து எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டு தீயாக பரவி வருகின்றது. “அவங்க பன்றங்களோ இல்லயோ, நீங்க நல்லா பண்றீங்க பாஸ்” என்று சொல்லப்படும் அளவிற்கு ரசிகர்கள் கவின், லாஸ்லியா காதலில் தீவிரமாக உள்ளார்கள் என தெரியவருகிறது.

ஆடிப்போன ரசிகர்கள்! மேலாடை இல்லாமல் ரோஜா குளியல் போட்ட அமலா பால்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஆடிப்போன ரசிகர்கள்! மே லா டை இல் லாமல் ரோஜா குளியல் போட்ட அமலா பால்.
Next articleஇந்த ஆண்டின் முதல் இடம் பிடித்த தளபதியின் பிகில் அதிக வசூல் செய்த படங்கள்!