குழந்தை வரம் தரும் காமாட்சி அம்மன்!

0
475

ஆடி மாதம் என்றாலே, கோவில்கள் அனைத்தும் திருவிழாகோலம் பூண்டிருக்கும்.

ஒவ்வொரு கோவில்களுக்கும் ஒவ்வோரு சிறப்புண்டு, அது போல சென்னை மாநகரம், சைதாப்பேட்டையில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் வேண்டுவோற்கு வேண்டும் வரம் தருவாள் என்று கூறப்படுகிறது.

இக்கோவிலில் திருவிழா காலங்களில் பொங்கல் வைப்பது, அன்னதானம் செய்வது என்று பல விஷேடங்கள் நடைபெற்று வருகிறது. கோவிலின் சிறப்பு 501 பெண்களுக்கு குங்குமபிரசாதம், குழந்தை இல்லாதவர்கள், திருமணம் நடைபெறாதவர்கள் இங்கே வந்து சென்றால் உறுதியாக நடப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.

இக்கோவிலில் தற்போது திருவிழா நடைபெறுவதால், பட்டுகோட்டை, புதுக்கோட்டை, நாகப்பட்டினம் ஆகிய வெளியூர்களிலிருந்தும் பொதுமக்கள் வந்து அம்மன் தரிசனம் பெற்று செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleபாம்பிற்கு பால் ஊற்றுவதன் காரணம் என்ன!
Next articleமழை காலம் ஆரம்பிச்சாச்சு! வீட்டில் கொசுகளை விரட்ட கொசுவிரட்டி செய்முறை பதிவு!