குரு பகவான் பொன்னவன். குரு பார்வை பட்ட இடங்கள் சுபிட்சம் அடையும். குரு பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசியில் பிரவேசம் செய்யப் போகிறார். மனிதர்கள் பிறந்த நாள் அன்று சந்திரன் சஞ்சரிக்கும் ராசி நட்சத்திரம் குறிப்பிடுகிறோம். அசுவினி முதல் ரேவதி வரை 27 நட்சத்திரங்கள் உள்ளன. இதில் முதன்மையானது அசுவினி நட்சத்திரம். இந்த நட்சத்திரன் நான்கு பாதங்களும் மேஷ ராசியில் உள்ளன. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை அள்ளித்தரப்போகிறார்.
அசுவினி நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான். ஞானகாரகன் கேதுவை அதிபதியாகக் கொண்டவர்கள் அசுவினி நட்சத்திர காரர்கள். கேது செவ்வாய்க்கு ஒப்பானவர். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடந்த ஆண்டு சில சிக்கல்கள் பிரச்சினைகள் சந்தித்திருப்பீர்கள். இந்த குரு பெயர்ச்சி அதி அற்புதமாக இருக்கிறது. எதிலும் முதன்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் நீங்கள். கடந்த ஆண்டு பல தொல்லைகள் துன்பங்களை அனுபவித்த உங்களுக்கு இனி பிரச்சினைகள் இல்லை.
விருச்சிக ராசியில் இருந்த காலத்தில் பல போராட்டங்கள் இருந்தது. உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்காமல் போனது. சிலரது உண்மையான முகத்தை வெளிக்காட்டியிருப்பார் குருபகவான். மனைவியே நம்மை மதிக்கலையே என்ற கவலை ஏற்பட்டிருக்கும். திறமை இருந்தும் அங்கீகாரம் இல்லையே என்ற கவலை இருந்தது. வாங்கிய கடனுக்கு வட்டி கட்டி அழுத்துப்போயிருப்பீர்கள். இனி குருபகவான் உங்களுக்கு அருமையான இடத்தில் அமரப்போகிறார். தனுசு ராசியில் அங்கே ஏற்கனவே குடித்தனம் செய்யும் கேது சனியோடு இணையப்போகிறார்.
சந்தோஷங்கள் அதிகமாகும்
தனுசு ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்த பின்னர் அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கவலைகள், பிரச்சினைகள் நெருக்கடிகள் நீங்கும். குருபகவான் உங்க வாழ்க்கையில் சகல சந்தோஷங்களை தரப்போகிறார். புதிய முயற்சிகள் பலிதாமாகும். குரு பலன் கிடைப்பதால் நினைத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொட்டது வெற்றியாகும்.
புரமோசன் கிடைக்கும்
குரு உங்களின் பாக்ய ஸ்தானத்தில் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் குரு அமரப்போகிறார். குரு கேது காம்பினேசன் அள்ளி கொடுப்பார். செல்வம் செல்வாக்கு மலரும். தெய்வ கடாட்சம் கிடைக்கும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும். புதிய வேலை கிடைக்கும். சிலருக்கு புரமோசன் கிடைக்கும்.
லாபங்கள் அதிகமாகும்
இதுநாள்வரை விரக்தியால் வேண்டா வெறுப்பாக இருந்தீங்க. இனி நல்லது நடக்கும். எதிர்காலம் பற்றிய பயம் நீங்கும். எதையும் திட்டம் போட்டு வாழ்க்கையை கட்டமைப்பீர்கள். திருமணம் கைகூடி வரும். ஒஙசனிபகவான் உங்களுக்கு போக்கு காட்டினாலும் ராகு மூன்றாம் வீட்டில் இருந்து உங்களை உற்சாக படுத்துகிறார். கணவன் மனைவி உறவுகள் சந்தோசமாக ஒன்றாக இணைய வாய்ப்பு உள்ளது நஷ்டங்கள் லாபங்களாக மாறும்.
கோடீஸ்வர யோகம்
தனுசு ராசியில் கேது பகவான் உடன் குரு பகவான் சேர்வதால் உங்களுக்கு கோடீஸ்வர யோகம் வரப்போகிறது. முட்டுக்கட்டைகள் நீங்கும் தொட்டது துலங்கும். எதிர்பாராத யோகங்கள் வரும். குரு பெயர்ச்சிக்கு பிறகு வெளிநாடு செல்லும் யோகம் வரும். வெளிநாடுகளில் வேலை கிடைக்கும். சிலருக்கு படிக்க வாய்ப்பு வரும். பண வரவு அபரிமிதமாக வரும். கடன்களை அடைப்பீர்கள். வியாதிகள் கட்டுக்குள் இருக்கும். குரு பார்வை உங்கள் ராசியையும் நட்சத்திரத்தையும் பார்ப்பதால் நன்மைகள் நடக்கும். இனிப்பான சந்தோமான செய்திகள் வரும். மொத்தத்தில் இந்த குரு பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளையும் லாபங்களையும் அள்ளித்தரப்போகிறது.
அசுவினிக்கு பரிகாரம்
வியாழக்கிழமைகளில் குருபகவானை வணங்கலாம். வியாழக்கிழமைகளில் மஞ்சள் நிற ஆடைகளை அணியலாம். அசுவினி நட்சத்திரகாரங்கள் குரு விரலில் தங்க மோதிரம் அணியலாம். கொண்டைக்கடலை நிவேதனம் செய்து பிரசாதமாக தானம் செய்யலாம் நன்மைகள் அதிகம் நடக்கும்.