துலாம் – குரு பெயர்ச்சி பலன்கள் 2019 – 2020
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசிகாரர்களே உங்கள் கனவு நனவாகும் காலம் !
குரு பகவான் திருக்கணித சித்தாந்தப்படி விகாரி வருடம் ஐப்பசி மாதம் 18-ஆம் தேதி திங்கட்கிழமை 57.56 நாழிகைக்கு, ஆங்கிலப்படி 05-11-2019 செவ்வாய்கிழமை அதிகாலை 05.17 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சியாகி 20-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார்.(வாக்கிய சித்தாந்தப்படி வரும் 29-10-2019 முதல் 15-11-2020 வரை தனுசு ராசியில் சஞ்சாரம் செய்ய உள்ளார் ). தனுசு ராசியில் குரு பகவான் சஞ்சாரம் செய்யவுள்ள காலங்களில் உண்டாகக் கூடிய பலா பலன்களை தெள்ளத் தெளிவாக வழங்கி உள்ளேன்.
துலாம் சித்திரை 3,4 ஆம் பாதங்கள் சுவாதி, விசாகம்1,2,3ஆம் பாதங்கள்
தம்முடைய சொந்த பொருட்களையும் பிறருக்கு தானமளிக்க கூடிய அளவிற்கு பரந்த நோக்கம் கொண்டவராக விளங்கும் துலா ராசி நேயர்களே, இதுநாள் வரை 2-ல் சஞ்சரித்த குரு பகவான் திருக்கணிதப்படி வரும் 05.11.2019 முதல் 20.11.2020 வரை முயற்சி ஸ்தானமான 3–ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போட வேண்டி இருக்கும். எதிலும் நன்மை தீமை கலந்த பலன்களையே பெறுவீர்கள். பணவரவுகளில் சுமாரான நிலை இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்துவிட முடியும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள் என்பதால் பிறரை நம்பி பெரிய தொகைகளை கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். குரு பார்வை 7, 9, 11-ஆம் வீடுகளுக்கு இருப்பதால் எதையும் சமாளித்து ஏற்றம் பெறுவீர்கள். எதிர்பாராத உதவிகள் தேடி வரும். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சி உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பாராத அனுகூலங்கள் ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் பல போட்டிகளை சமாளித்தே எதிர்பார்த்த லாபத்தினை அடைய முடியும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை தள்ளி வைப்பதும் நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கப் பெற்றாலும் வேலைப்பளு அதிகமாக தான் இருக்கும். சர்ப கிரகமான ராகு 9-லும், கேது 3-ஆம் வீட்டிலும் சஞ்சரிப்பதால் இருக்கும் தடைகளை சமாளிக்கும் யோகமும், சிலருக்கு அனுகூலமான பயணமும் உண்டாகும். தற்போது சனி 3-ல் சஞ்சரிப்பதால் எதிர்பாராத அனுகூலங்களை பெறுவீர்கள். திருக்கணிதப்படி வரும் 24.01.2020 முதல் சனி பகவான் 4-ஆம் வீட்டில் சஞ்சரிக்க இருப்பதால் உங்களுக்கு அர்த்தாஷ்டம சனி தொடங்குகிறது இதனால் தேவையில்லாத அலைச்சல் ஏற்படும். உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வதும், பேச்சில் நிதானத்தை கடைப்பிடிப்பதும் உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பதும் நல்லது.
உடல் ஆரோக்கியம்
உங்களின் உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி ஏதாவது பாதிப்புகள் தோன்றி கொண்டே இருக்கும். ரத்த அழுத்த சம்பந்தப்பட்ட நோய், சர்க்கரை வியாதி போன்றவற்றிற்காக மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக் கொண்டிருப்பவர்கள் உணவு விஷயத்தில் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உள்ளவர்களால் வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். இருப்பதை அனுபவிக்க இடையூறு ஏற்படும்.
குடும்பம் பொருளாதார நிலை
குடும்பத்தில் வீண் வாக்குவாதங்கள் அதிகரிக்கும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை குறையும். உற்றார் உறவினர்களும் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார்கள். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது. பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருந்தாலும் எதிர்பாராத வீண் விரயங்களும் உண்டாகும். சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகள் ஏற்படும். அசையும் அசையா சொத்துக்களால் வீண் செலவுகள் ஏற்படும். பெரியவர்களிடம் கருத்து வேறுப்பாடு உண்டாகும். முன்கோபத்தை குறைத்து கொள்வது மிகவும் உத்தமம்.
கமிஷன் ஏஜென்ஸி
கமிஷன் ஏஜென்ஸி காண்டிராக்ட் போன்ற துறைகளில் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டிய காலமாகும். பிறரை நம்பி பண விஷயத்தில் முன்ஜாமீன் கொடுப்பதால் வீண் பிரச்சினைகளை சந்திப்பீர்கள். எடுக்கும் முயற்சிகளில் தடை தாமதங்கள் வீண் வம்பு வழக்குகளில் இழுபறி நிலைகள் உண்டாகும். கொடுத்த கடன்கள் சுமாராக வசூலாகும்.
தொழில் வியாபாரம்
தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்தநிலை நிலவினாலும், பொருட்தேக்கம் ஏற்படாது. கூட்டுத்தொழில் செய்பவர்கள் கூட்டாளிகளை மிகவும் அனுசரித்து செல்வதே நல்லது. தொழிலில் உண்டாகக்கூடிய போட்டி பொறாமைகளால் உங்களுக்கு கிடைக்க வேண்டிய புதிய வாய்ப்புகளும் கைநழுவிப் போகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகளும் தாமதப்படுவதால் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தி செய்ய நினைக்கும் காரியங்களை சற்று தள்ளி வைப்பது நல்லது.
உத்தியோகம்
உத்தியோகஸ்தர்கள் பணியில் நெருக்கடியான நிலையினை சந்திப்பீர்கள். உயரதிகாரிகளிடம் தேவையற்ற வாக்குவாதங்கள் ஏற்படும். பிறர் செய்யும் தவறுகளுக்கும் சேர்த்து பழிச்சொற்களை ஏற்க வேண்டிவரும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் உண்டாவதால் குடும்பத்தை விட்டு பிரிய கூடிய சூழ்நிலையும் அதனால் அலைச்சலும் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது நல்லது.
அரசியல்
அரசியல்வாதிகள் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டிய காலமாகும். பெயர், புகழுக்கு பஞ்சம் இருக்காது என்றாலும் வருவாய் குறைவடையும். செய்யாத தவறுகளுக்காக தேவையற்ற அவப்பெயரை சம்பாதிப்பீர்கள். மக்களின் ஆதரவைப் பெற மிகவும் பாடுபட வேண்டியிருக்கும். உடனிருப்பவர்களிடம் பேசும் போது பேச்சில் நிதானம் தேவை.
விவசாயிகள்
பயிர் விளைச்சல் சுமாராக இருப்பதால் பொருளாதார நிலையும் சுமாராகத்தான் இருக்கும். பட்டபாட்டிற்கு ஏற்ற பலனைப் பெற முடியும். பூமி, மனை போன்றவற்றால் சிறுசிறு வீண் செலவுகள் உண்டாகும். அரசு வழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சற்று தாமதப்படும். பங்காளிகளின் ஆதரவு மன நிம்மதியை தரும்.
பெண்கள்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொண்டால் மட்டுமே அன்றாடப் பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். பணவரவுகள் சுமாராக இருந்தாலும் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விடமுடியும். கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகக்கூடிய காலம் என்பதால் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. வரவுக்கு மீறிய செலவுகள் உண்டாகும் என்பதால் ஆடம்பர செலவுகளை குறைத்து கொள்வது நல்லது. பணிபுரியும் பெண்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.
மாணவ- மாணவியர்
கல்வியில் முழு ஈடுபாடுட்டுடன் செயல்பட்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும். விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது கவனமுடன் செயல்படுவது நல்லது. தேவையற்ற நட்புகளை தவிர்க்கவும். எடுக்கும் முயற்சிகளில் எதிர்நீச்சல் போடவேண்டியிருக்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவு ஒரளவுக்கு சிறப்பாகவே இருக்கும்.
குரு பகவான் மூல நட்சத்திரத்தில் 05.11.2019 முதல் 04.01.2020
உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3-ல் குரு பகவான் கேது நட்சத்திரமான மூலத்தில் சஞ்சரிப்பது எடுக்கும் முயற்சியில் தடையை உண்டாக்கும் அமைப்பு என்றாலும் 3-ல் சனி- கேது சஞ்சரிப்பதால் எதையும் சமாளிக்கும் திறன் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சோர்வு, மந்தநிலை போன்ற பாதிப்புகள் உண்டாகலாம். பொருளாதார நிலை ஓரளவுக்கு ஏற்ற இறக்கமாக இருந்தாலும் எதிர்பாராத உதவிகள் கிடைக்கப் பெறுவதால் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்து விட முடியும். கணவன்- மனைவியிடையே தேவையற்ற ஒற்றுமை குறைவுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, விட்டு கொடுத்து நடந்து கொள்வது உத்தமம். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது.
பிறர் செய்யும் தவறுகளுக்கு பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்பட்டாலும், பலருக்கு ஆலோசனைகள் வழங்கக் கூடிய ஆற்றலால் தங்கள் மதிப்பும் மரியாதையும் உயர்வடையும். தொழில் வியாபாரத்தில் லாபகரமான பலன் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்வது, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதன் மூலம் நல்ல லாபத்தை பெறுவீர்கள். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் எடுத்து கொண்டால் மட்டுமே எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மிகவும் நல்லது.
குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 05.01.2020 முதல் 07.03.2020
ஜென்ம ராசிக்கு 3-ல் குரு பகவான் ஆட்சி பெற்று ராசியாதிபதி சுக்கிரன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எதிர் நீச்சல் போட்டாவது ஏற்றங்களை அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. பணவரவுகளில் நெருக்கடிகள் ஏற்படும் என்றாலும் 3-ல் கேது சஞ்சரிப்பதால் நெருங்கியவர்களின் உதவியால் தேவைகள் பூர்த்தியாகும். எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றல் உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு போட்டிகள் நிலவும். வெளியூர் வெளிநாடு தொடர்புடைய வாய்ப்புகள் கிடைக்கும்.
கணவன்- மனைவி விட்டு கொடுத்து நடந்து கொண்டால் குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். உற்றார் உறவினர்கள் ஓரளவுக்கு ஆதரவுடன் செயல்படுவார்கள். அசையும் அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்து செயல்படுவது உத்தமம். பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் நிம்மதியான நிலையிருக்கும். மாணவர்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை பெற சற்றே முழு முயற்சியுடன் பாடுபடுவது உத்தமம். குரு பகவான் வழிபாடு, துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது சிறப்பு.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 08.03.2020 முதல் 29.03.2020
குரு பகவான் தனது நட்பு கிரகமான சூரியன் நட்சத்திரத்தில் 3-ல் சஞ்சரிப்பதால் எதையும் எதிர்கொள்ளும் பலம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் எடுத்து கொள்வது, முடிந்தவரை பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது உத்தமம். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடி இருக்கும். முடிந்தவரை ஆடம்பரமாக செலவுகள் செய்வதை தவிர்ப்பது நல்லது. எடுக்கும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உற்றார், உறவினர்களை சற்று அனுசரித்துச் செல்வது நல்லது. பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு.
பெரிய தொகைகளை பிறரை நம்பி கடனாக கொடுப்பதை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும் என்றாலும் தேவையற்ற அலைச்சல், டென்ஷன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற்று விட முடியும். போட்டிகள் அதிகரித்தாலும் கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழிலாளர்களிடம் தட்டி கொடுத்து வேலை வாங்கி கொள்வது உத்தமம். மாணவர்களுக்கு கல்வியில் மந்த நிலை உண்டாக கூடும் என்பதால் கல்வியில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வியாழக்கிழமை தோறும் தட்சிணாமூர்த்தியை வழிபடுவது மூலம் நற்பலனை அடையலாம்.
குரு பகவான் மகர ராசியில் உத்திராட நட்சத்திரத்தில் 30.03.2020 முதல் 14.05.2020
உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரித்த குரு பகவான் அதிசாரமாக 4-ல் சஞ்சரிப்பது சற்று சாதகமான அமைப்பு என்பதால் உங்களுக்குள்ள மறைமுக எதிர்ப்புகள் மறைந்து உங்கள் பலமும் வளமும் கூடும். 3-ல் கேது சஞ்சரிப்பதால் பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். எதிர்பாராத உதவிகளும் கிடைத்து குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகும் என்பதால் உணவு விஷயத்தில் கட்டுபாடுடன் இருப்பது நல்லது. கணவன்- மனைவியிடையே ஒற்றுமை நிலவும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். உற்றார் உறவினர்களும் ஓரளவுக்கு ஒற்றுமையுடன் செயல்படுவார்கள்.
பணம் கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் போது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேர்ந்தாலும் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விட முடியும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். அடிக்கடி பயணங்களை மேற்கொள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட்டு அனைவரின் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். வேலைபளு அதிகரிக்கும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. எதிர்பார்க்கும் உயர்வுகள் சற்று தாமதப்படும். மாணவர்கள் கல்வியில் முழு மூச்சுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களை பெற முடியும். தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
குரு பகவான் வக்ர கதியில் 15.05.2020 முதல் 12.09.2020
குரு பகவான் வக்ர கதியில் சஞ்சரிப்பதாலும் ஜென்ம ராசிக்கு 3-ல் கேது சஞ்சரிப்பதாலும் குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளில் தடையின்றி அனுகூலம் கிட்டும். சிலருக்கு வீடு மனை வாங்க கூடிய வாய்ப்பும் அமையும். 4-ல் சனி சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சற்று மந்தநிலை ஏற்பட்டாலும் அன்றாட பணிகளில் சிறப்புடன் செய்ய முடியும். உற்றார் உறவினர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சியளிப்பதாக அமையும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நற்பலனை தரும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும்.
கொடுக்கல்- வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தி லாபம் காண முடியும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி நற்பெயரை எடுப்பீர்கள். தொழில், வியாபாரத்திலிருந்த மறைமுக எதிர்ப்புகள் யாவும் குறைவதால் லாபங்கள் சிறப்பாக இருக்கும். கிடைக்க வேண்டிய வாய்ப்புகளும் தடையின்றி கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம்பட செயல்பட முடியும். எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். பயணங்களால் அனுகூலப்பலனை அடைவீர்கள். மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். ராகு காலங்களில் துர்கை அம்மனை வழிபடுவது அஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
குரு பகவான் பூராட நட்சத்திரத்தில் 13.09.2020 முதல் 30.10.2020
உங்கள் ராசிக்கு 3-ல் குரு பகவான் சுக்கிரன் நட்சத்திரமான பூராடத்தில் சஞ்சரிப்பதாலும், 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதாலும் தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும். சுகவாழ்வில் பாதிப்பும், வீண் செலவுகள் உண்டாகும். சர்ப கிரகமான ராகு 8-லும், கேது 2-லும் 23-09-2020 முதல் சஞ்சரிக்க இருப்பதால் கணவன்- மனைவியிடையே தேவையற்ற வாக்கு வாதங்களும், கருத்து வேறுபாடுகளும் அதிகரிக்க கூடும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்த வேண்டி வரும். அன்றாட பணிகளை செய்து முடிப்பதில் சோர்வு உண்டாகும். நேரத்திற்கு உணவு உண்ண முடியாத சூழ்நிலை ஏற்படும். பணவரவுகளில் சற்று நெருக்கடியான நிலை இருந்தாலும் தக்க சமயத்தில் தகுந்த உதவிகள் கிடைத்து குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. உற்றார் உறவினர்கள் தேவையற்ற பிரச்சினைகளை ஏற்படுத்த கூடிய சந்தர்ப்பங்கள் உண்டாகும். பணம் கொடுக்கல் – வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும் என்றாலும் எந்தவித பிரச்சினைகளையும் சமாளிக்கக் கூடிய ஆற்றலைப் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் மந்த நிலை நிலவினாலும் பொருள் தேக்கம் ஏற்படாது. பெரிய முதலீடுகளை ஈடுபடுத்தும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து செயல்படுவது உத்தமம். மாணவர்கள் தேவையற்ற நட்புகளை தவிர்த்து கல்வியில் கவனம் செலுத்துவது உத்தமம். அம்மனை தரிசிப்பது, குரு வழிபாடு மேற்கொள்வது நல்லது.
குரு பகவான் உத்திராட நட்சத்திரத்தில் 31.10.2020 முதல் 20.11.2020
உங்கள் ராசிக்கு குரு பகவான் 3-ல் சூரியன் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் எடுக்கும் முயற்சியில் தேவையில்லாத இடையூறு உண்டாகும். எந்தவொரு காரியத்திலும் ஒரு முறைக்கு பல முறை சிந்தித்துச் செயல்படுவது நற்பலனை தரும். உங்கள் ராசிக்கு 2-ல் கேது, 8-ல் ராகு சஞ்சரிப்பதால் உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். பணவரவுகள் தேவைக்கு ஏற்றபடியிருக்கும் என்றாலும் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக் கொள்வது நல்லது. உற்றார் உறவினர்களிடையே வீண் வாக்கு வாதங்கள் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது, முன்கோபத்தை குறைப்பது உத்தமம்.
திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் ஏற்படும். 4-ல் சனி சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடப்பதால் பணம் கொடுக்கல்- வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகைகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரம் போன்றவற்றில் எதிர்பார்த்த லாபத்தை அடைய சற்று எதிர்நீச்சல் போட வேண்டியிருக்கும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டிகளும் அதிகரிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்து விடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர்வுகள் தாமதப்பட்டாலும் பணியில் கௌரவமான நிலை இருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்களும் உண்டாகும். மாணவர்கள் தேவையற்ற பொழுது போக்குகளில் ஈடுபடுவதை தவிர்த்து கல்வியில் அதிக கவனத்தை செலுத்துவது நல்லது. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.
பரிகாரம்
துலா ராசியில் பிறந்துள்ள உங்களுக்கு குரு பகவான் 3-ஆம் வீட்டில் சஞ்சரிப்பதால் குரு ப்ரீதியாக தட்சிணா மூர்த்திக்கு நெய் தீபமேற்றி கொண்டை கடலை மாலை சாற்றி வழிபடுவது நல்லது. வியாழக்கிழமைகளில் விரதமிருந்து, மஞ்சள் நிற மலர்களால் அலங்கரித்து, நெய் தீபமேற்றி வழிபடுவது, குரு எந்திரம் வைத்து வழிபடுவது நல்லது. ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்வது, ஆடைகள், புத்தகங்கள், நெய், தேன் போன்றவற்றை தானம் செய்வது உத்தமம்.
மஞ்சள் நிற ஆடைகள் அணிவது, கைகுட்டை உபயோகிப்பது சிறப்பு.
வரும் 24.01.2020 முதல் திருக்கணிதப்படி சனி 4-ல் சஞ்சரித்து அர்த்தாஷ்டம சனி நடைபெறுவதால் சனிக்குரிய பரிகாரங்களை தொடர்ந்து செய்து வருவது நல்லது. ஆஞ்சநேயரையும், வெங்கடாசலபதியையும் வழிபடுவது, ஊனமுற்ற ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நல்லது.
அதிர்ஷ்டம் அளிப்பவை
எண் – 4,5,6,7,8
நிறம் – வெள்ளை, பச்சை
கிழமை – வெள்ளி, புதன்
கல் – வைரம்
திசை – தென் கிழக்கு
தெய்வம் – லக்ஷ்மி